பொது செய்தி

தமிழ்நாடு

அறநிலைய துறையின் புதிய கமிஷனர் பதவியேற்பு

Added : மே 15, 2021
Share
Advertisement
சென்னை:அறநிலையத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள குமர குருபரன் பதவியேற்றார்.பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவித்த அறநிலையத் துறைக்கு, 2018 டிசம்பரில், பணீந்திர ரெட்டி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.இவரது பதவி காலத்தில் தான், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து, பல கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 5,000த்திற்கும் மேற்பட்ட
 அறநிலைய துறையின்  புதிய கமிஷனர் பதவியேற்பு

சென்னை:அறநிலையத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள குமர குருபரன் பதவியேற்றார்.

பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவித்த அறநிலையத் துறைக்கு, 2018 டிசம்பரில், பணீந்திர ரெட்டி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.இவரது பதவி காலத்தில் தான், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து, பல கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 5,000த்திற்கும் மேற்பட்ட கோவில்களும் கண்டறியப்பட்டன.

கோவில் நகைகள், சிலைகள், ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து, இணையதளம் வாயிலாக வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அறநிலையத் துறையில் இருந்த காலி பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்பவும் உத்தரவிட்டார். அரசியல் குறுக்கீடுகள் காரணமாக, அவரால் நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய முடியவில்லை.

இதையடுத்து, அறநிலையத்துறை கமிஷனராக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக இருந்த பிரபாகர், 2020 செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். அவர், இத்துறையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், சில மாதங்களிலேயே மத்திய அரசு பணிக்கு அழைக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த மாதம் அறநிலையத்துறை கமிஷனராக, ராஜாமணி நியமிக்கப்பட்டார். சமீபத்தில், சட்டசபை தேர்தல் முடிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில், அறநிலையத்துறைக்கான புதிய கமிஷனராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமையகத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X