சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 15, 2021
Share
Advertisement
'முதலில், தொற்றாளர்களின் மூக்கை குடையும் படங்களை, 'டிவி'கள் நிறுத்த வேண்டும். அதன் பின், 'பாசிட்டிவ்' செய்திகளை மட்டுமே காண்பிக்க செய்ய வேண்டும். டிவிகளை திறக்க முடியவில்லை... பீதியை அதிகரித்து, பி.பி.,யை கூட்டுறாங்க...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., செய்தித் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை: கொரோனா ஊரடங்கு காலத்தில், தேவையற்ற விதத்தில் மக்கள் நடமாட்டம்

பேச்சு, பேட்டி, அறிக்கை

'முதலில், தொற்றாளர்களின் மூக்கை குடையும் படங்களை, 'டிவி'கள் நிறுத்த வேண்டும். அதன் பின், 'பாசிட்டிவ்' செய்திகளை மட்டுமே காண்பிக்க செய்ய வேண்டும். டிவிகளை திறக்க முடியவில்லை... பீதியை அதிகரித்து, பி.பி.,யை கூட்டுறாங்க...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., செய்தித் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை: கொரோனா ஊரடங்கு காலத்தில், தேவையற்ற விதத்தில் மக்கள் நடமாட்டம் கூடாது என்பது சரி தான். அதுபோல, ஊடகங்களில் பீதியை கிளப்பும் வகையில் செய்திகளை தவிர்த்தல், இன்றைய நிலையில் மிக அவசியம்.

'நீங்கள் எல்லாரும், 60 வயது வரை வேலை பார்ப்பீர்கள்; உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும். பார்த்துக் கொள்ளுங்கள்...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் ஜெயச்சந்திரராஜா பேட்டி: அரசு பணியாளர்களின் ஓய்வு வயதை 59ல் இருந்து, 60 ஆக உயர்த்தியது போல, கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியும் பணியாளர்கள் ஓய்வு வயது, 60 ஆக அரசு உயர்த்தியதை வரவேற்கிறோம். அத்துடன், மாநிலத்தில் காலியாக உள்ள 3,400 விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்


'நகரங்கள் போலவே, கிராமங்களிலும் மருத்துவ வசதிகள் செய்வது, இப்போது மிகவும் அவசியமாகி விட்டது...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ம.க., தலைவர் மணி பேச்சு:
நகரங்களில் பரவிய தொற்று, இப்போது கிராமங்களுக்கும் பரவி விட்டது. எனவே, கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லுாரிகளிலும் கொரோனா சிகிச்சை மையத்தை துவக்க வேண்டும்.


'இப்படி வாங்கி, அப்படி கொடுத்து விட வேண்டும் என்கிறீர்கள். ஆளும் கட்சிக்கு ஆதரவான சங்கம் என்பதால், எல்லாரும் கேட்கத் தான் செய்வர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் சண்முகம் அறிக்கை:
அரசு அலுவலர்களுக்கு, முந்தைய அரசு சில சலுகைகளை வழங்க மறுத்தாலும், சம்பளத்தில் பிடித்தம் செய்யவில்லை. கொரோனா நிவாரண நிதி வழங்க, முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை மதித்து, தமிழக அரசு வழங்கும் 2,000 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்.

.
'ஒரு இளம் எம்.பி., வித்தியாசமாக செயல்பட்டால், கட்சிகளின் பெருசுகளுக்கும், ஊழல் பெருச்சாளிகளுக்கும் பிடிக்காதே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், பெங்களூரு தெற்கு தொகுதி, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா அறிக்கை:
கர்நாடகாவில் நடந்த மருத்துவமனை படுக்கை முறைகேட்டை அம்பலப்படுத்திய என் மீது காங்., தொடர்ந்த வழக்கு, ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. 'பொதுநலன் கோரும் மனு என்ற பெயரில், அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரக் கூடாது' என, மனுதாரரை நீதிமன்றம் கண்டித்துள்ளது.


'இரும்பு இதயங்களிலும் பூக்களை மலரச் செய்ததில், கொரோனாவின் பங்கு அதிகம் என்பதை, உங்கள் செயல் எடுத்துக்காட்டுகிறது. இப்படியே, பாரபட்சம், பிரிவினைவாதம், ஒரு சாராரை புறக்கணிப்பது என்றில்லாமல், வாழும் காலம் வரை நல்லவிதமாக வாழ அனைவருக்கும், இந்த கொரோனா நேரத்தில் அறிவுரை கூறுங்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:
சென்னையில், பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையை, கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாக மாற்றிக் கொள்ளலாம் என, தமிழக சுகாதார துறை அமைச்சருக்கு தகவல் தெரிவித்து, எடுத்துக் கொள்ள சொல்லியுள்ளோம். அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்கு, தமிழக அரசுக்கு நன்றி.

'இதுபோன்ற நிலைமை தமிழகத்திலும் வர வேண்டும்; எப்போது வருமோ என்பதே, இப்போதைய கவலையாக உள்ளது...' எனக் கூறத் தோன்றும் வகையில், கர்நாடக சுகாதார துறை அமைச்சர் சுதாகர் அறிக்கை: கர்நாடகாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, தொற்றால் பாதிக்கப்படுவோரை விட, நோயிலிருந்து குணமாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், 16 மாவட்டங்களில் கொரோனா பலி எண்ணிக்கை, தினமும் ஐந்து அல்லது அதற்கும் குறைவாகத் தான் உள்ளது.


'இப்போதைய தேவை ஆக்சிஜன். அதற்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்பது சரியானது தான்...' எனக் கூறத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
கொரோனா நோயாளிகளுக்கு அவசிய தேவையான ஆக்சிஜன் உற்பத்திக்கு, மத்திய - மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் பெரிய நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும், சமூக பொறுப்பு அடிப்படையில் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ முன்வர வேண்டும்.


'அ.தி.மு.க., ஆட்சியில், இ.பி.எஸ்.,சும் இதைச் செய்தாரே... அப்ப எங்க இருந்தீங்க...' எனக் கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை:
உயிரை பணயம் வைத்து பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்த செயல், தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும்.


'யார் யார் எந்தெந்த பணிகளை செய்ய வேண்டும் என்பது போல, மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்ற வரையறை உள்ளது. அதை மீறினால், இப்படித் தான் ஆகும்...' எனக் கூறத் துாண்டும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'நாங்களே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்கிறோம்' என்று வீர வசனம் பேசிய எதிர்க்கட்சிகள், அதை பெறுவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து,'மத்திய அரசே கொள்முதல் செய்து வினியோகிக்க வேண்டும்' என்கின்றன. பொறுமையாக, மத்திய அரசின் திட்டத்தை ஏற்று செயல்பட்டிருந்தால், உயிரிழப்புகளை குறைத்து இருக்கலாம்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X