பொது செய்தி

இந்தியா

இரண்டாவது அலை பரவல் ஏன்? மோகன் பாகவத் விளக்கம்!

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி :''கொரோனா முதல் அலை பரவல் குறைந்த பின், அரசு நிர்வாகமும், மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டதால் தான் இரண்டாவது அலை பரவியது,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும், மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், 'நேர்மறை எல்லையில்லாதது' என்ற தலைப்பில், 'ஆன்லைனில்'
இரண்டாவது அலை பரவல்,ஆர்.எஸ்.எஸ்., தலைவர் விளக்கம்!


புதுடில்லி :''கொரோனா முதல் அலை பரவல் குறைந்த பின், அரசு நிர்வாகமும், மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டதால் தான் இரண்டாவது அலை பரவியது,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும், மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், 'நேர்மறை எல்லையில்லாதது' என்ற தலைப்பில், 'ஆன்லைனில்' தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.


latest tamil news


நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
கொரோனா முதல் அலை பரவிய போது, அதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை, மக்கள் முழுமையாக பின்பற்றினர். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதை அரசு நிர்வாகமும் கண்காணித்து உறுதி செய்தது. முதல் அலை பரவல் குறைந்ததும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில், மக்கள் மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் அலட்சியம் காட்டியது. இதனால் தான் இரண்டாவது அலை தீவிரமாக பரவியுள்ளது.

மூன்றாவது அலை பற்றியும் பேசப்படுகிறது. இதற்கு நாம் பயப்படக் கூடாது. நாம் ஒற்றுமையாக எழுந்து நின்றால் கொரோனா சவால்களை முறியடித்து விடலாம். நம்பிக்கையுடன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், கொரோனாவை வென்று விடலாம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வதை விடுத்து, தொற்றிலிருந்து விடுபட அனைவரும் முயற்சிக்க வேண்டும். தைரியத்தை கைவிடாமல் உறுதியாக இருந்தால் நெருக்கடியிலிருந்துவிரைவில் மீள்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
16-மே-202116:24:31 IST Report Abuse
vnatarajan கடந்த மாநில தேர்தல்களின் பொது அரசியல்வாதிகள் கூட்டம் போட்டு மேடை பேச்சை தவிர்த்திருக்கவேண்டும். மேலும் மத ரீதியான கூட்டங்கள் கோவில் திருவிழாக்களையும் தவிர்த்திருக்க வேண்டும் ஆனால் இதையெல்லாம் அரசியல்வாதிகளும் மக்களும் அரசாங்கமும் கண்டுகொள்ளவேயில்லை. அரசியல்வாதிகள் ஆச்சி மற்றும் பதவிகளை பிடிப்பதில் குறிக்கோளாக இருந்தனர். அதன் விளைவுதான் தற்போதைய அதிகரித்துள்ள மனித உயிர் பலிகள்
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
16-மே-202115:11:50 IST Report Abuse
pradeesh parthasarathy அப்போ விளக்கு பிடித்து கையை தட்டினால் குணமாகதா ...?
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
16-மே-202114:31:41 IST Report Abuse
அறவோன் திறமையற்றவர்கள் கையில் அதிகாரம் சென்ற காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X