அரசியல் செய்தி

தமிழ்நாடு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஸ்டாலின் ஆய்வு

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: ''மழையால் பாதிக்கப்படுவோரை, முகாம்களில் தங்க வைக்கும் போது, கொரோனா எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.அரபிக்கடலில் உருவாகி உள்ள, 'டவ்டே'புயல் சின்னம் தொடர்பாக, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன்

சென்னை: ''மழையால் பாதிக்கப்படுவோரை, முகாம்களில் தங்க வைக்கும் போது, கொரோனா எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.latest tamil news


அரபிக்கடலில் உருவாகி உள்ள, 'டவ்டே'புயல் சின்னம் தொடர்பாக, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் பங்கேற்று, புயல் சின்னம் குறித்த நிலவரம், மழை பெய்யவுள்ள சாத்திய கூறுகளை எடுத்துரைத்தார்.அரபிக்கடலில் உருவாகி உள்ள, புயல் சின்னத்தை தொடர்ந்து, கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில், உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, முதல்வர் உத்தரவிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது: ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள், கரைக்கு திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீன் பிடிக்க சென்ற, 244 ஆழ்கடல் மீன்பிடி படகுகளில், 162 படகுகள் கரை திரும்பியுள்ளன. மற்ற படகுகளும் கரை திரும்ப, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிலச்சரிவு ஏற்படக்கூடிய, மலை மாவட்டங்களில், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை, தயாராக வைத்திருக்க வேண்டும்.


latest tamil news


மழையால் பாதிக்கப்படுவோரை, முகாம்களில் தங்க வைக்கும்போது, கொரோனா தடுப்பு எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வருவாய் துறையினர் முழு வீச்சில், களப்பணிகளை செய்ய வேண்டும். அணைகளின் நீர் மட்டங்களை கண்காணிக்க வேண்டும்.தேசிய பேரிடர் மீட்பு படையின் நான்கு குழுக்களில், இரண்டு குழுக்கள் மதுரையிலும், கோவை மற்றும் நீலகிரியில், தலா ஒரு குழுவும் நிறுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களில், அந்த குழுக்கள் வாயிலாக, உடனடியாக நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறினார். கூட்டத்தில், தலைமை செயலர் இறையன்பு, வருவாய் துறை செயலர் அதுல்யமிஸ்ரா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramouli - Mumbai,இந்தியா
16-மே-202111:49:04 IST Report Abuse
Chandramouli எல்லோரும் புயல் பாதிப்பை கண்டு அறிந்து உதவி செய்ய உடன் கிளம்புங்கள். ரேஷன் அரிசி, பெட்ரோல், டீசல், மானென்னை உடன் கொடுக்கவும். ஆக்சிஜென், மருந்து, ஆம்புலன்ஸ் எல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம். ககன் தீப் சிங்க் அவர்கள் புயல் பாதித்த பகுதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பர். இப்படியும் செய்திகள் வரலாம் இந்த நேரத்தில் , எப்போ எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தடுமாறி கொண்டு இருக்கிறது இந்த அரசு
Rate this:
Cancel
moorthi - tirupur,இந்தியா
16-மே-202110:47:17 IST Report Abuse
moorthi இப்படி ஒரு முதல்வருக்கு ஒட்டு போடாமல் அடிமைகளுக்கு ஒட்டு போட்டதுக்கு இன்று நான் வெட்கப்படறேன் வேதனை படுகிறேன்
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
16-மே-202109:30:10 IST Report Abuse
தமிழன் கெராம சபைய கூட்றப்ப இல்லாத அக்கற மக்கள் மேல இப்ப வந்துருச்சாம்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X