இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்சரணாலயத்தில் இறந்த புலிபோபால்: மத்திய பிரதேசத்தின் பந்தவ்கர் தேசிய புலிகள் சரணாலயத்தில், நேற்று முன்தினம் ஒரு புலி, உடல் சிதைந்து அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இறப்புக்கான காரணம் அறிய, உடலின் சில பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக, சரணாலய அதிகாரிகள் கூறினர்தமிழக நிகழ்வுகள்தூக்கத்தால் வந்த விபரீதம்: தம்பி கொலை; அண்ணன்
today, crime, round up, இன்றைய, கிரைம் ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்சரணாலயத்தில் இறந்த புலி

போபால்: மத்திய பிரதேசத்தின் பந்தவ்கர் தேசிய புலிகள் சரணாலயத்தில், நேற்று முன்தினம் ஒரு புலி, உடல் சிதைந்து அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இறப்புக்கான காரணம் அறிய, உடலின் சில பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக, சரணாலய அதிகாரிகள் கூறினர்


தமிழக நிகழ்வுகள்

தூக்கத்தால் வந்த விபரீதம்: தம்பி கொலை; அண்ணன் கைது
போத்தனூர்:ஆத்துப்பாலம் அடுத்த கரும்புகடை பூங்கா நகர் அருகேயுள்ள, ராஜிவ் நகரை சேர்ந்தவர் காதர். இவரது மகன்கள் ஜாஹீர், 31, தவுபிக், 24. நேற்று முன்தினம் இரவு, ஜாஹீர் தூங்கிக்கொண்டிருந்தார்.போதையில் வீட்டிற்கு வந்த தவுபிக், பெற்றோருடன் வாக்குவாதம் செய்துள்ளார். தூக்கம் கலைந்த ஜாஹீர் சத்தம் போட்டுள்ளார்.ஆத்திரமடைந்த தவுபிக் அங்கிருந்த கத்தியை எடுத்து, ஜாஹீரை குத்த முயன்றார். கத்தியை பிடுங்கிய ஜாஹீர், தவுபிக் வயிற்றில் குத்தியுள்ளார்.படுகாயமடைந்தவரை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி, தவுபிக் உயிரிழந்தார். போத்தனூர் போலீசார் விசாரணையில், தவுபிக் கஞ்சா விற்று வந்தது தெரிந்தது. ஜாஹீரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

பங்க் முன் நின்றவர் விபத்தில் பலி
தேவகோட்டை: தேவகோட்டை அருகே புலிகுளத்தைச் சேர்ந்தவர் முத்தையா, 58. இவரது மகன் வினோத்குமார், 28. இருவரும் மோட்டார்சைக்கிளில் வந்தனர். மாவிடுதிக்கோட்டை அருகே உள்ள பெட்ரோல்பங்க் முன் தந்தை முத்தையாவை நிற்க வைத்து விட்டு பெட்ரோல் போட சென்றார்.அந்த வழியாக ரத்தினவேல் என்பவர் வேகமாக ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முத்தையா மீது மோதியதில் முத்தையா காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாகன விபத்தில் டாக்டர் மரணம்

அன்னூர்:அன்னூர், ஜீவா நகர், சன்மேஸ்வரன் மகன் சந்தோஷ், 26; டாக்டர். இவர் குரும்பபாளையம் தனியார் மருத்துவமனையில், டாக்டராக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை ஸ்கூட்டரில், அன்னூரில் இருந்து குரும்பபாளையம் சென்று கொண்டிருந்தார். கரியாம்பாளையம், பவர் ஹவுஸ் அருகே, எதிரே கோவையில் இருந்து வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியது. நிலைதடுமாறிய ஸ்கூட்டர், அதே ரோட்டில் வந்த புல்லட் பைக் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் சென்ற சந்தோஷ் படுகாயமடைந்து, மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். புல்லட் பைக்கில் வந்த காட்டம்பட்டி, செல்வராஜ், 49. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அன்னூர் போலீசார், கார் டிரைவர் சங்கேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திட்டக்குடி : திட்டக்குடி அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை, போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திட்டக்குடி அடுத்த கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல் மகன் ராஜசேகர், 21; இவர், தொளார் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 22ம் தேதி கடத்திச் சென்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் அருகேரி கிராமத்தில், சிறுமியுடன் இருந்த ராஜசேகரை பிடித்து விசாரித்தனர். அதில் சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, சிறுமியை மீட்ட ஆவினங்குடி போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராஜசேகரை கைது செய்தனர்.

முதியவரை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : தகராறில் முதியவரை தாக்கிய 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த காணை குப்பத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 55; இவரது தம்பி மகள் ராதா என்பவரை, காணையை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், ராதாவை, சரண்ராஜ் தினமும் திட்டி அடித்து வந்துள்ளார்.இதை கடந்த 9ம் தேதி தட்டிக்கேட்ட தண்டபாணியை, சரண்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் வடகரைதாழனுாரை சேர்ந்த முரளி, சங்கர், பலராமன், சண்முகம், கம்சலா, அஞ்சலை, வசந்தி, ஜெயந்தி ஆகியோர் திட்டி தாக்கினர்.புகாரின்பேரில், சரண்ராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


latest tamil news


3000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே, 3,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, கருக்காகுறிச்சி கிராமத்தில், கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருப்பதாக, எஸ்.பி., பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசார் மற்றும் வடகாடு போலீசார், கருக்காகுறிச்சியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

முனியன் கோவில் அருகே, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் போடப்பட்டிருந்த 3,000 லிட்டர் ஊறலை, போலீசார் கீழே கொட்டி அழித்தனர். ஊறல் போட்டவர்களை தேடி வருகின்றனர்.


latest tamil news


ஒரு நாளைக்கு 300 பேருக்கு தான் ரெம்டெசிவிர் மருந்து: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை:சென்னை, நேரு விளையாட்டு அரங்கில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கியது. ஒரு நாளைக்கு, 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படுவதால், பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. பலருக்கு மருந்து தேவைப்படுகிறது.சமூக இடைவெளி இல்லைதனியார் மருத்துவமனைகளில், மருந்து தட்டுப்பாடு காரணமாக, தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஏப்ரல் 26ம் தேதி முதல், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அங்கு, அதிகளவில் கூட்டம் கூடியதால், திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனாலும், கீழ்ப்பாக்கத்தில் கூட்டம் குறைந்தபாடில்லை. இதனால், மருந்து விற்பனை, சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள, நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டது.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை, துவங்கியது. நள்ளிரவு முதலே, மருந்து வாங்க மக்கள் குவிய துவங்கினர். ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள், புதிதாக வந்தவர்கள் என, இரண்டு வரிசைகளில், 500க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். காலை, 9:00 மணிக்கு, நான்கு கவுன்டர்களில் துவங்கிய மருந்து விற்பனையில், ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு, சமூக இடைவெளி இல்லாமல், மருந்து வாங்க உள்ளே சென்றனர்.

அப்போது தினமும், 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பால், வரிசை யில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, மருந்து வாங்க வந்தோர் கூறியதாவது:'ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்தில்லை. மருந்துக்காக அலைய வேண்டாம்' என, தமிழக அரசு தெரிவிக்கிறது.பின், எதற்கு டாக்டர்கள், ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வருமாறு சொல்கின்றனர்; அரசே ஏன் இந்த மருந்தை விற்பனை செய்ய வேண்டும்?

மருந்து விற்பனையை அரசு நிறுத்தி விட்டால், டாக்டர்களும், எங்களை மருந்து வாங்கி வரும் படி சொல்ல மாட்டார்கள்.எதற்காக அரசு பொது மக்களை கஷ்டப்படுத்துகிறது.மருந்து விற்பனையில் திட்டமிடல் இல்லாததால், வாங்க வருபவர்களுக்கும் தொற்று ஏற்படும் நிலை தான் உள்ளது. பாதுகாப்பு பணியில், போலீசார் மட்டுமே உள்ளனர்.சுகாதாரத் துறை அதிகாரிகள் யாருமில்லை. பல மணி நேரம் வரிசையில் நிற்கிறோம். குடிக்க தண்ணீர் வசதி கூட இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X