பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் வரும் 28 ல் கூடுகிறது

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: ஏழு மாத இடைவெளிக்கு பின், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், வரும் 28ம் தேதி கூடுகிறது.நாடு முழுதும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017ல் அமலுக்கு வந்தது. இந்த வரி விதிப்பு தொடர்பான பிரச்னைகளை விவாதித்து, தீர்வு காண்பதற்கு அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், காலாண்டுக்கு ஒரு முறை நடந்து வந்தது.கடந்த ஆண்டு அக்., 5ல் நடந்த கூட்டத்தில்,

புதுடில்லி: ஏழு மாத இடைவெளிக்கு பின், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், வரும் 28ம் தேதி கூடுகிறது.நாடு முழுதும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017ல் அமலுக்கு வந்தது. இந்த வரி விதிப்பு தொடர்பான பிரச்னைகளை விவாதித்து, தீர்வு காண்பதற்கு அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், காலாண்டுக்கு ஒரு முறை நடந்து வந்தது.latest tamil news


கடந்த ஆண்டு அக்., 5ல் நடந்த கூட்டத்தில், மாநிலங்களின் ஜி.எஸ்.டி., வருவாயில் ஏற்பட்ட சரிவை சமாளிக்க, கடன் பெறுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் தீர்வு காணும் நோக்கில், கூட்டம் நீட்டிக்கப்பட்டு, 12ம் தேதி முடிவடைந்தது.அதன்பின் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடக்கவில்லை.


latest tamil news


இந்நிலையில், 'ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதிஇருந்தார். இதையடுத்து, நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், வரும் 28ம் தேதி கூடும் என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கவுள்ள இந்த கூட்டத்தில், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sri - mumbai,இந்தியா
16-மே-202115:13:21 IST Report Abuse
sri தமிழக புதிய நிதி அமைச்சருக்கு ஒரு அருமையான வாய்ப்பு அவர் பல நேர்காணல்களில் , ஜி எஸ் டி வசூலை , மாநிலங்களோடு பகிர்ந்து கொள்வதில் , மத்திய அரசு தமிழகத்தை மோசமாக வஞ்சித்து , வசூல் குறைவான பீஹார் போன்ற மாநிலங்களுக்கு வாரி வழங்கி , திட்டத்தின் அமைப்பையே கெடுத்து குட்டிசுவராகியதை , விளக்கியிருக்கிறார். இப்போது , புள்ளி விவரங்களோடு , கூட்டத்தில் பேசி தமிழகத்துக்கு நியாயம் வழங்க செய்ய வேண்டும். தமிழக குடிமகன்கள் டாஸ்மாக் உற்சாக பானங்களை மொடா மோடாவாக குடித்து , அதற்கு டாஸ்மாக் ஜி எஸ் டி வரி செலுத்தி , பிறகு மாநிலப் பங்கை பெறாமல் போனால் - என்ன அநியாயம்? இதற்காகத்தான உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு சாராயம் குடிப்பது ? நெஞ்சே பொறுக்குதில்லையே
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
16-மே-202111:01:21 IST Report Abuse
Believe in one and only God நாட்டில் பல கோடி மக்களுக்கு உணவில்லை. Hospital-லில் என்த வசதியும் இல்லை. Covid தடுப்பு மருந்தை வெளிநாடுகளுக்கு உள் தரகர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி கொண்டு இருக்கிறார்கள். இந்த இக்கட்டான நெவார்த்தில்ல GST ஒரு கேடா??
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
16-மே-202108:20:37 IST Report Abuse
kosu moolai பார்கலாம் இவர்களின் செயல்பாட்டை. பெட்ரோல், டீசலலை ஜி எஸ் டி வளையத்தில் கொண்டுவர முயற்சிப்பார் என நம்புவோம். எதற்க்கும் அண்டை மாவடத்திலிருக்கும் வேட்டி கட்டிய பிரபஞ்ச அறிவு பெட்டகத்தை , இவர் அணுகி ஆலோசனை பெறலாம். ஏற்கனவே இவர் மாவட்டத்திலுள்ள பல சில சிறு குறு அறிவு ஜீவிகள் சரியான வாய்ப்பில்லாமல் தெருவில் ஜெலுசிலும், பர்னாலும் வித்துக்கிட்டு இருக்காங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X