அமெரிக்க அதிபரின் ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் நியமனம்

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன், 50, நியமிக்கப்பட்டுள்ளார்.சட்ட வல்லுனரான நீரா தாண்டன், பில் கிளிண்டன் ஆட்சியின்போது, அமெரிக்க அரசின் கொள்கை பிரிவு துணை இயக்குனராக பணியை துவக்கினார்.அதன்பின், ஒபாமாவின் தேர்தல் பிரசார குழுவின் கொள்கை இயக்குனர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஒபாமாவின்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன், 50, நியமிக்கப்பட்டுள்ளார்.



latest tamil news


சட்ட வல்லுனரான நீரா தாண்டன், பில் கிளிண்டன் ஆட்சியின்போது, அமெரிக்க அரசின் கொள்கை பிரிவு துணை இயக்குனராக பணியை துவக்கினார்.அதன்பின், ஒபாமாவின் தேர்தல் பிரசார குழுவின் கொள்கை இயக்குனர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஒபாமாவின் காப்பீட்டு சட்ட கொள்கை உருவாக்கத்தில், இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

தற்போது அமெரிக்க மேம்பாட்டு மையத்தின் தலைவராக உள்ள நீரா டாண்டன், சமூக ஊடகங்களில் வெளிப்படையாக கருத்துகளை கூறி, அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இவர் சார்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் குறித்தும், கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு உள்ளார். அதனால், இரு மாதங்களுக்கு முன், அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் துறை இயக்குனராக, நீரா டாண்டன் நியமிக்கப்பட்டதற்கு, குடியரசு கட்சியினருடன், அவர் சார்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் சிலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news


அதனால் நீரா டாண்டன் பதவி ஏற்க முடியாமல் போனது. இந்நிலையில், ஜோ பைடன் தன் தலைமை ஆலோசகராக, நீரா டாண்டனை நியமித்து உள்ளார். 'அதிபருக்கு, 'டிஜிட்டல்' சேவைகள் மற்றும் அனைவருக்குமான காப்பீடு ஆகிய இரு முக்கிய துறைகளில், நீரா டாண்டன் ஆலோசனை வழங்குவார்' என, வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramouli - Mumbai,இந்தியா
16-மே-202113:33:54 IST Report Abuse
Chandramouli கமலா ஹாரிஸ் மூலமே ஒரு பயனும் இல்லை என்கிற போது இந்தியன் என்பதினால் எந்த பயனும் நமக்கு கிடைக்காது. தேவை இல்லாத இந்த மாதிரி செய்திகளை நாம் பெரிதுபடுத்த கூடாது . அல்லது இதை பிரசுரம் செய்யாமல் இருக்க வேண்டும்
Rate this:
Cancel
NoBs - chennai,இந்தியா
16-மே-202111:58:06 IST Report Abuse
NoBs இந்த இந்திய வம்சா வழியினரால் நமக்கு ஒரு உபயோகமும் கிடையாது காஷ்மீரில் மூக்கை நுழைப்பதிலிருந்து பாகிஸ்தானுக்கு பரிந்து வாதம் செய்வது வரை இவர்கள், குறிப்பாக அவர்களின் உதவி ஜனாதிபதி இந்த அம்மா உதவி ஜனாதிபதியின் தங்கை மகள் மற்றும் பிரமிளா ஜெயபால் எனும் ஒரு அம்மா, ....முன்னே நிற்பவர்கள். இந்த மாதிரி ஆட்களின் நட்பை விட விரோதிகள் பரவாயில்லை. முற்றிலும் அமெரிக்கர்கள் இந்த மாதிரி குடியுரிமை அமெரிக்கர்களை விட பல மடங்கு தேவலை.
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
16-மே-202111:27:45 IST Report Abuse
S. Bharani அவரவர்களுக்கு வாழ்வளிக்கும் நாட்டுக்கு விசுவாசமாகவும் நன்றியுடனும் இருக்க வேண்டும்.அதுதான் நல்ல பண்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X