சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் திருவிழா; கட்டப் பஞ்சாயத்தில் காலில் விழுந்த முதியவர்கள்; போலீஸ் நடவடிக்கை

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் பகுதியில் நடந்த கோவில் திருவிழா பிரச்னையை முன்னிட்டு நடந்த கட்டப்பஞ்சாயத்தில் மூன்று முதியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்விழுப்புரம் அருகே ஒட்டனந்தல் காலனி பகுதியில் ஊரடங்கை மீறி ஒரு பிரிவினர் கரகாட்டத்துடன் கோவில் திருவிழா நடத்தியதாக

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் பகுதியில் நடந்த கோவில் திருவிழா பிரச்னையை முன்னிட்டு நடந்த கட்டப்பஞ்சாயத்தில் மூன்று முதியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்latest tamil news


விழுப்புரம் அருகே ஒட்டனந்தல் காலனி பகுதியில் ஊரடங்கை மீறி ஒரு பிரிவினர் கரகாட்டத்துடன் கோவில் திருவிழா நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், நோய் பரவலுக்கு காரணமானவர்கள்மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீசார் சென்ற பின்பும் அடங்காத அக்கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இசைக்கச்சேரி நடத்தியுள்ளனர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் இசைக்குழுவின் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இளைஞர்கள் செய்த தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்பதாகவும் தங்கள் மீது போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெறவும், இசைக்கருவிகளை திரும்ப கொடுக்கச் சொல்லுமாறும் திருவிழா ஏற்பாடு செய்த முதியவர்கள் வேண்டியுள்ளனர். அப்போது கிராமத்து பகுதியைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து பேசி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுச் செல்லும் படி சொல்லியுள்ளனர். இதையடுத்து பட்டப்பகலில் 3 முதியவர்களும் வயது வித்தியாசம் பார்க்காமல் பஞ்சாயத்தார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கொடுமை நடந்தது.


latest tamil news


இந்த கட்டப்பஞ்சாயத்தின் போது பெரியவர்கள் தரையில் விழுந்து மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் பஞ்சாயத்து செய்த கோகுல்ராஜ், சீதாராமன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., ராதா கிருஷ்ணன் கூறியதாவது, ‛ கிராம பகுதிகளில் சாதிய தீண்டாமையை உருவாக்கும் விதமாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்'.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sri - trichy,இந்தியா
20-மே-202115:22:34 IST Report Abuse
sri இதற்கு காரணம் பிஜேபி மோடி பதவி விலகவேண்டும் . உதயாநிதி பிரதமர் அகா அறிவிக்கவேண்டும்
Rate this:
Cancel
sankar - ghala,ஓமன்
19-மே-202110:01:36 IST Report Abuse
sankar இது பெரியார் மண் ,நம்புங்கோ இங்கே ஜாதி (ஒளிந்து) சுய மரியாதை மலர்ந்து விட்டது ,வாழ்க திராவிடம் .
Rate this:
Cancel
Raja - Trichy,இந்தியா
16-மே-202119:23:29 IST Report Abuse
Raja பிறப்பில் ஏதுடா உயர்வு தாழ்வு. ஒருவரை பிறப்பினால் தன்னைவிட குறைவாய் எண்ணுபவன் மனரீதியில் பாதிக்க பட்டவன் என்றே கொள்ளவேண்டும். பிறப்பினால் யாரும் தாழ்த்தவர் இல்லை, அதுபோல் பிறப்பினால் யாரும் உயர்ந்தவர் இல்லை.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
22-மே-202114:21:23 IST Report Abuse
Dr. Suriyaஉடன்பிறப்புகள், மதம் மாறின க்ரிப்டோகள், சொரியார் மண்ணுன்னு சொல்றவனுவோ, அவனுவோ எப்போது ஊளை போட்டுகொண்டு கூறும் ஆரிய வந்தேறிகல் தமிழகத்தில் இந்த மாதிரி நடந்துக்கிறாங்களானுன்னு மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X