பொது செய்தி

தமிழ்நாடு

7 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை மையம்

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: 'டவ்டே' புயல் காரணமாக, கேரளா, அதை ஒட்டிய, ஏழு தமிழக மாவட்டங்களில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதன்படி, நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், கன முதல் மிக கன மழை பெய்யலாம். சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.நீலகிரி, தேனி,

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: 'டவ்டே' புயல் காரணமாக, கேரளா, அதை ஒட்டிய, ஏழு தமிழக மாவட்டங்களில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.



latest tamil news


இதன்படி, நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், கன முதல் மிக கன மழை பெய்யலாம். சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.நீலகிரி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஏழு மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு, இதே சூழல் நிலவும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில், இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும்.

நேற்று காலை நிலவரப்படி, நீலகிரி மாவட்டம், தேவாலாவில், அதிகபட்சமாக, 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம், பெரியாறு, கோவை மாவட்டம், சோலையார் பகுதிகளில், தலா, 10 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், 9; பெருஞ்சாணி, சித்தார், தேனி மாவட்டம், தேக்கடி பகுதிகளில், தலா, 8 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.புயல் காரணமாக, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும். மத்திய கிழக்கு அரபிக் கடல், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில், மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும்.எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்கு, மீனவர்கள், கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னையில், வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.வால்பாறையில் பாதிப்பு கோவை மாவட்டம், வால்பாறையில் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து கன மழை பெய்கிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. மேல்நீராறு, கீழ்நீராறு அணைகளில் இருந்து, சோலையாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 2.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 429 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.


latest tamil news


மே 31ல் பருவ மழைஆண்டுதோறும் ஜூன் ஒன்றாம் தேதியை ஒட்டி, தென் மேற்கு பருவ மழை துவங்கும். தற்போது, அரபிக் கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில், பருவ மழை துவக்கத்துக்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது.இந்த பின்னணியில், வரும், 31ல், கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக, இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதோடு, மழையால் கிடைக்கும் நீரை பாதுகாக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X