பொது செய்தி

தமிழ்நாடு

பால் விலை குறைப்பு இன்று முதல் அமல்

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை: அரசு அறிவித்தபடி, ஆவின் பால் விலை குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஆவின் பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைக்கப்படும் என, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வரான பின், ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆவின் பால் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பும் அப்போது வெளியானது. பால்

சென்னை: அரசு அறிவித்தபடி, ஆவின் பால் விலை குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.



latest tamil news


தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஆவின் பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைக்கப்படும் என, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வரான பின், ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆவின் பால் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பும் அப்போது வெளியானது. பால் விலை குறைப்பு, 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அறிவிக்கப்பட்டது.


latest tamil news


அதன்படி, ஆவின் பால் விலை குறைப்பு நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.நீல நிற பால் பாக்கெட், 1 லிட்டர், 40 ரூபாய்; 500 மி.லி., 20 ரூபாய்; பச்சை நிற பால் பாக்கெட், 500 மி.லி., 22; ஆரஞ்சு நிற பால் பாக்கெட், 24 ரூபாய் என, புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பால் பாக்கெட்டில் விற்பனை தேதியும், புதிய விலையும், ஆவின் கார்டுதாரர்களுக்கான விலையும் அச்சிடப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSR -  ( Posted via: Dinamalar Android App )
16-மே-202122:33:14 IST Report Abuse
VSR கார்டுதாரர்களுக்கே அதிக பலன். ஆவின் பால் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். கார்டுதாரர்களுக்கு நீல நிறம் 1/2 லிட்டர் பாக்கெட் 18.50ஆவின் பார்லரில் 20 ரூ. / மற்ற கடைகளில் 21 ரூயில் இருந்து22 ரூ. விற்கிறார்கள். பார்லர்களில் actual ஆக 19.50.தான். ஆனால் 20 ரூ.யாக வசூல் செய்யப்படுகிறது 50 காசு சில்லறை பிரச்சினையால். ஒரு நாளைக்கு 500 பாக்கெட் விற்றால் கூட, Extra லாபம் 250 ரூ. இதற்கு முன்பும் அப்படித்தான். orang பாக்கெட் முந்தைய விலை 25-50 ஒரு பாக்கெட் வாங்கினால் 26 ரூ. இரண்டு பாக்கெட் வாங்கினால் 51 ருபாய் சரியான சில்லரை கொடுத்தால் நஷ்டம் இல்லை. ஒரு ரூபாய்க்கு பதில் 2 ருபாய் நாணயம் கொடுத்தால் மீதி ஒரு ரூபாய் நாளைக்கு adjust செய்யலாம் என்பார்கள். மறு நாள் கேட்டால் ஞாபகம் இல்லை நேற்றே நீங்கள் மீதியை வாங்கிக் கொள்ளவில்லை என்று நம்மையே எதிர் கேள்வி கேட்பர். ஒரு ரூபாய் பெரிய விஷயம் இல்லை என்றாலும் ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு ருபாய் அவர்களுக்கு Extra கிடைக்கிறது. Aavin Parlour களில் எப்பவும் பாலுக்கு demand. ஒரு நாளைக்கு ஒவ்வொரு பார்லர்களிலும் ஆயிரம் விட்டி வரை sale ஆகிறது. குறைந்தது அதிகப்படி லாபம் 1000 ரூ. ஈட்டுகிறார்கள். எனவே ஆவின் பார்லர்களிலும் கார்டு முறை கொண்டு வரப்பட வேண்டும்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
16-மே-202122:14:59 IST Report Abuse
 rajan ஆவின் பால் விட்ட்டருக்கு மூன்று ருபாய் குறைத்தது மகிழ்ச்சி. விலை குறைப்பால் மாதம் 300 முதல் 400 ருபாய் மிச்சம் என்று ஒரு பெண்மணி கூறுவதுதான் அதிகப்படியாக உள்ளது. அதுவும் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் கூறுகிறார். அவர் கூற்றுப்படி அவர்கள் வீட்டில் தினம் 4 லிட்டர் பால் வாங்குவார் போலும். சாதாரண நீல நிற பாக்கட் 4 லிட்டர் வாங்கினாலே கார்டுதாரர்களுக்கு 148 ரு ஆகிறது. அப்படியானால் மாதம் கிட்டத் திட்ட 4400 ருபாய்க்கு பால் வாங்குகிறார்கள். Royal Family போல.
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
16-மே-202121:44:36 IST Report Abuse
Raja ஆறு ரூபாய் ஏத்தினதை மறைச்சுட்டு மூணு ரூபாய் குறைச்சத விளம்பரம் பண்றாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X