பொது செய்தி

தமிழ்நாடு

வெளியில் தலை காட்ட தடை: தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுதும், ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள், நேற்று முதல் அமலுக்கு வந்தன. இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் தினமும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நோய் பரவலை தடுக்க, ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என, மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தினர்.புதிய கட்டுப்பாடுகள்சட்டசபை கட்சி

சென்னை: தமிழகம் முழுதும், ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள், நேற்று முதல் அமலுக்கு வந்தன. இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் தினமும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.latest tamil news


நோய் பரவலை தடுக்க, ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என, மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தினர்.புதிய கட்டுப்பாடுகள்சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்திலும், ஊரடங்கை தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.காலை, 10:00 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை, பழக்கடைகள் திறந்திருந்தன. மற்ற கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. மருந்தகங்கள், உணவகங்கள் மட்டும் திறந்திருந்தன.காலை, 10:00 மணிக்கு மேல், மக்கள் வீடுகளில் முடங்கினர்.

கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ரேஷன் கடைகளில் பணம் வாங்கவும், ரெம்டெசிவிர் மருந்து வாங்கவும் மக்கள் குவிந்தனர். இங்கு, சமூக இடைவெளி பின்பற்றப்படாதது ஏமாற்றமே.இவற்றை தடுக்க வீடு தோறும், 'டோக்கன்' கொடுக்கும் போதே பணம் வழங்கவும், அந்தந்த மருத்துவமனைகளிலேயே ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று அத்தியாவசிய தேவைக்காக, சிலர் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்றதால், ஒரு சில முக்கிய சாலைகளில் மட்டும், வாகன போக்குவரத்து இருந்தது.


latest tamil news


'இ -- பதிவு' அவசியம்இன்று ஞாயிற்றுக்கிழமை, தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், எந்த கடைகளும் திறக்கப்படாது.நாளை காலை, 4:00 மணி வரை முழு ஊரடங்கு தொடரும்.நாளை காலை, 6:00 மணி முதல், அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்றவற்றுக்காக, மாவட்டங்கள் உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணம் மேற்கொள்ள,'இ -- பதிவு' அவசியம்.eregister.tnega.org என்ற இணையதளத்தில், இ -- பதிவு செய்து கொள்ள வேண்டும் அந்த ஆவணத்துடன் பயணம் செய்தால், தடையின்றி செல்லலாம் என, அரசு அறிவித்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-மே-202109:26:57 IST Report Abuse
chandran, pudhucherry . கொரணா ஒரு பொதுவான பிரச்னை. ஜாதி மதம் பார்க்காத உண்மையான மதசார்பற்ற கட்சி கொரணாதான். ஸ்டாலின் அவர்கள் இதை முழுமையாக உணரவேண்டும். மதசார்பின்மை என்பது ஹிந்து மதம் அல்லாத மதத்தை ஆதரிப்பது. ஆனால் இந்த கொரணா உண்மையான மதசார்பின்மையை கடைபிடிப்பதால் திராவிடத்தின் ஒழிக்கப்படவேண்டிய முதல் விரோதி இந்த கொரணாதான். இதை யாராவது அவருக்கு புரிய வைங்க அப்புறம் பாருங்க 23ம்(புலிகேசி) முதல்வர. கொரணாவ தல தெரிக்க ஓட விடுவாரு
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் ,இந்தியா
16-மே-202109:23:38 IST Report Abuse
Svs Yaadum oore //....நீங்கள் எல்லாவற்றிலும் குறை காண்பதில் இருக்கிறீர்கள் என்ன ஒரு நல்ல மனசு....//....எல்லாவற்றிலும் குறை கண்டால் ஒரு உயிரும் தப்பாது ...இந்த சுகாதார அமைச்சர் மற்றும் முதல்வருக்கு யார் ஆலோசகர் என்று தெரியலை ....முதலில் நோய் கட்டுப்பாடு ....நோயை வளர்த்து விட்டு அதற்கு ஏற்ற மாதிரி ரெம்டெசிவிர் மருந்து , ஆக்சிஜென் என்று தேட முடியாது ...அது மேலும் பிரச்சனை வளர்க்கும் மற்றும் மரணம் அதிகரிக்கும் ...நோயை கட்டுப்படுத்த போலீஸ் சுகாதார ஊழியர் இருந்தால் போதும் ..அதுக்கு மேலும் நிதி தேவையில்லை ..இப்ப எதுக்கு 2000 கொடுத்து கூட்டம் ...வங்கி கணக்கில் செலுத்துங்க ...இதை செய்யாமல் இந்த மின்னல் வேகத்தில் பரவும் காரோண கட்டுக்குள் வரவே வராது ...
Rate this:
Chidam - 325,இந்தியா
16-மே-202119:26:28 IST Report Abuse
Chidamமிகச் சரியாக சொன்னீர்கள் அன்பரே .... இந்த சமயத்தில் கூட்டம் கூடுவது நல்லதல்ல , இரண்டாயிரம் ரூபாயை சற்று தாமதித்துக்கூட கொடுக்கலாம் ....
Rate this:
Cancel
... - ,
16-மே-202109:10:43 IST Report Abuse
... வெளியில் தலை காட்ட தடை... விக் வைத்தவர்கள் மட்டும் வரலாம்... விக்ரமாதித்தன் ராக்ஸ்...
Rate this:
வணங்காமுடி திராவிடன் - அஞ்சாமை திராவிடர் உடமையடா ,இந்தியா
16-மே-202118:47:26 IST Report Abuse
வணங்காமுடி திராவிடன் 5 வருடம் நீ ஒன்னும் கிழிக்க முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X