அமெரிக்காவில் வாழ்க்கை துணைக்கும் விசா; கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவு

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில், 'எச் - 1 பி' விசாவுடன் பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைவர்களுக்கு பணி வழங்கும் திட்டத்திற்கு, 'கூகுள்' உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, எச் - 1 பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவால் அதிக அளவிலான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில், 'எச் - 1 பி' விசாவுடன் பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைவர்களுக்கு பணி வழங்கும் திட்டத்திற்கு, 'கூகுள்' உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.



latest tamil news


அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, எச் - 1 பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவால் அதிக அளவிலான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பயனடைந்து வருகின்றனர்.இந்த விசாவுடன் பணியாற்றுவோரின் மனைவி அல்லது கணவரும், அமெரிக்காவில் வேலை பார்க்க, எச் - 4 என்ற விசா வழங்கப்பட்டு வந்தது. அமெரிக்க இளைஞர்களின் வேலைவாய்ப்பு கருதி, கடந்தாண்டு அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், எச் - 1 பி, எச் - 4 உள்ளிட்ட விசாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். விசா வினியோகித்தை நிறுத்தி வைத்தும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், டிரம்பின் அந்த உத்தரவை ரத்து செய்தார். இந்நிலையில், எச் - 1 பி விசாவுடன் பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி வழங்கும் இந்த திட்டத்திற்கு, கூகுள் தலைமையிலான 30க்கும் மேற்பட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.


latest tamil news


'அடோப், அமேசான், ஆப்பிள், இ மே, ஐ.பி.எம்., இன்டெல், மைக்ரோசாப்ட், டுவிட்டர்' உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.இது குறித்து கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளதாவது:அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து வருவோருக்கு ஆதரவு அளிப்பதில் கூகுள் பெருமை அடைகிறது. எச் - 1 பி விசாவுடன்பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி வழங்கும் இந்த திட்டத்திற்கு ஆதரவாக, கூகுள் நிறுவனத்துடன் 30 நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ளன. இந்த திட்டத்தால் வேலைவாய்ப்புகள் உருவாகும். பல குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-மே-202102:01:26 IST Report Abuse
DARMHAR பைடன் அவர்கள் சிறந்த முற்போக்கு கொள்கைகள் உடையவர்.
Rate this:
Cancel
Rajan - chennai,இந்தியா
16-மே-202122:19:35 IST Report Abuse
Rajan buy one get one free..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-மே-202111:47:17 IST Report Abuse
Ramesh Sargam ஜோ பைடன் அவர்களுக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X