அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை காங்., தலைவர் யார்? நாளை ஓட்டெடுப்பு!

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
சென்னை: தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நாளை நடக்கிறது. ஓட்டெடுப்பு வாயிலாக, சட்டபை கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற, எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.தமிழக காங்கிரஸ் சார்பில், 18 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். சட்டசபையில் இந்த முறை, பா.ஜ., எதிர்ப்பு அரசியலை செய்ய வேண்டிய நிலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு
Tamilnadu, Congress, AsssemblyLeader, தமிழகம், காங்கிரஸ், சட்டபை, தலைவர்

சென்னை: தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நாளை நடக்கிறது. ஓட்டெடுப்பு வாயிலாக, சட்டபை கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற, எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
தமிழக காங்கிரஸ் சார்பில், 18 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். சட்டசபையில் இந்த முறை, பா.ஜ., எதிர்ப்பு அரசியலை செய்ய வேண்டிய நிலை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏற்பட்டுள்ளது.


கடும் போட்டி


அந்த அடிப்படையில், சட்டசபையில் சூடாக விவாதிக்கும் ஆற்றல் உடைய எம்.எல்.ஏ., தான், சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியில் ஜொலிக்க முடியும். எனவே, சட்டசபையில் சிறப்பாக செயல்படக் கூடிய எம்.எல். ஏ.,வை, சட்டசபை தலைவராக தேர்வு செய்ய, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக, சமீபத்தில் நடந்த சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்தில், விஜயதாரணி, முனிரத்தினம் பங்கேற்றனர். இதில், விஜயதாரணி மட்டும் பேசினார். அவர், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலராக உள்ளார். 'டிவி' விவாதங்களில் பங்கேற்று வருகிறார். பத்தாண்டுகளாக சட்டசபை கொறடாகவும் இருந்துள்ளார். மகளிருக்கு முதல் முறையாக, சட்டசபை கட்சி தலைவர் வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.


latest tamil news


செல்வப்பெருந்தகையும், 'டிவி' விவாதங்களில் பங்கேற்று வருகிறார். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவராகவும் உள்ளார்.தலித் சமுதாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அவரும் காய் நகர்த்தி வருகிறார்.மாணவர் அணி, இளைஞரணி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் போன்ற பதவிகளை வகித்த ராஜேஷ்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.மேலும், முனிரத்தினம், பிரின்ஸ் போன்றவர்களும், தலைவர் பதவி கேட்டு வருகின்றனர். ஐந்து பேர் மத்தியில் தான் கடும் போட்டி நிலவுகிறது.


latest tamil news



நிர்வாகிகள் தேர்வு


இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில், அழகிரி தலைமையில், எம்.எல். ஏ.,க்கள் கூட்டம், நாளை நடக்கிறது.எம்.எல்.ஏ.,க்களின் கருத்தை அறிய, காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக, ராஜ்யசபா காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழக காங்கிஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் நடைபெறுகிற அக்கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டெடுப்பு வாயிலாக, சட்டசபை கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பின், காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதலுடன் வெளியிடப்பட உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
16-மே-202122:14:27 IST Report Abuse
தல புராணம் இங்கி. பிங்கி, பாங்க்கி .. ஃபாதர் ஹாட் எ டாங்கி ...
Rate this:
Cancel
Shankar - Hawally,குவைத்
16-மே-202122:05:38 IST Report Abuse
Shankar ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கணும்னா எப்படி? யார் யாருக்கு ஒட்டு போடுவாங்க? இருக்குற அத்தனை பெரும் இல்ல சட்டமன்ற தலைவராகணும்னு போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க.
Rate this:
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
16-மே-202119:08:28 IST Report Abuse
K E MUKUNDARAJAN நாளைக்கு இந்நேரம் அடிதடி முடிந்து வேஷ்டி கிழிந்து யார் என்பது தெரியவரும். காலையிலேயே எல்லா குழுவின் ஆட்களும் கூடி மோதலுக்கு தயார் ஆவார்கள். பாப்போம். யார் வந்தாலும் ஆளும் கட்சிக்குத்தான் தாளம் போட வேண்டும், இதில் தலைவராகி என்ன பிரயோஜனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X