பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியாவுக்கு உதவிக்கரம்; குவைத் அமைப்புகள் தாராளம்

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: கொரோனா தடுப்பு பணியில், குவைத் வாழ் இந்தியர்கள், தாய்நாட்டுக்காக உதவி செய்வதில் முனைப்புடன் செயல்படுகின்றனர்.குவைத்தில், 45 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில், 10 லட்சம் பேர் இந்தியர்கள்.கடந்தாண்டு குவைத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அப்போது, அந்நாட்டு மக்களுக்கே போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காத நிலை. அதனால், இந்தியர்கள் மருத்துவ உதவிக்காக அல்லாடினர்.
 இந்தியா, உதவிக்கரம், குவைத் அமைப்புகள், தாராளம்

சென்னை: கொரோனா தடுப்பு பணியில், குவைத் வாழ் இந்தியர்கள், தாய்நாட்டுக்காக உதவி செய்வதில் முனைப்புடன் செயல்படுகின்றனர்.
குவைத்தில், 45 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில், 10 லட்சம் பேர் இந்தியர்கள்.கடந்தாண்டு குவைத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அப்போது, அந்நாட்டு மக்களுக்கே போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காத நிலை. அதனால், இந்தியர்கள் மருத்துவ உதவிக்காக அல்லாடினர். அப்போது, நம் நாட்டு அரசு, அங்குள்ள இந்தியர்களை மட்டுமின்றி, அந்நாட்டு மக்களையும் காக்கும் வகையில், மருத்துவ உபகரணங்கள், டாக்டர்களை அனுப்பியது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு குறைந்தது.
தற்போது, நம் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துஉள்ளது. இதைத் தடுக்கும் வகையில், குவைத்தில் உள்ள இந்திய அமைப்புகள், அந்நாட்டு அரசிடம் அனுமதி பெற்று, பல்வேறு உதவி களை வழங்கி வருகின்றன.


latest tamil news





சேவை மனப்பான்மை


இது குறித்து, இந்திய, 'பிரன்ட் லைனர்ஸ்' அமைப்பின் நிறுவனர் என்.சி.மோகன்தாஸ் கூறிய தாவது:குவைத்தில், இந்தியர்கள், 200க்கும் மேற்பட்ட அமைப்புகளை உருவாக்கி உள்ளனர். அவற்றில், 20க்கும் குறைவான அமைப்புகளே, சேவை மனப்பான்மையுடன் செயல்படு கின்றன. மற்றவை, ஆண்டுக்கு ஒருமுறை கூடி மகிழும் கலாசார நிகழ்வுகளை மட்டுமே நடத்துகின்றன.

பொதுவாகவே, இந்தியாவும், குவைத்தும் நட்பு நாடுகள். ஏற்கனவே நாம், குவைத்துக்கு தடுப்பூசி, மருந்து பொருட்கள், டாக்டர்கள், நர்சுகளை அனுப்பியதால், அந்நாட்டு அரசு, நன்றி உணர்ச்சியுடன், நம் அமைப்புகளின் உதவியைப் பெற்று அனுப்ப முன்வந்துள்ளது.தற்போது, நமக்கான ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் மட்டுமின்றி, பல்வேறு உதவிகளை பெற்று அனுப்புவதில், இந்திய துாதரகம், இந்தியன் கம்யூனிட்டி சர்வீஸ், அல் ரஷீட் ஷிப்பிங், ஆர்.ஓ.சி., - ஐ.எப்.எல்., உள்ளிட்டவை முனைப்புடன் உள்ளன.
எங்கள் அமைப்பை பொறுத்தவரை, அங்குள்ள கொரோனா நோயாளிகளுக்கு, 'முகல் மஹால்' வாயிலாக, உணவு மற்றும் ரேஷன் பொருட்களை வழங்கியது. அதற்காக, இந்திய துாதரகம் பாராட்டியது. மேலும், அவசர தேவைக்காக, இரு நாடுகளுக்கும் செல்வோருக்கு உதவுவது, இறந்தோரின் உடலை அனுப்புவது உள்ளிட்ட சேவைகளையும் செய்கிறது.
அத்துடன், தமிழகத்தில் உள்ள பாலம், எக்ஸ்னோரா, அன்னை டிரஸ்ட், நின்னலம் டிரஸ்ட், கங்காரு டிரஸ்ட், சென்னை லாரா குரூப் உள்ளிட்டவற்றுடன் இணைந்து, தமிழகத்தில் பாதிக்க பட்டோருக்கு உணவு, மளிகை, பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
16-மே-202121:17:17 IST Report Abuse
தல புராணம் பச்ச.. பச்சைன்னு கதறும் காவிக்கூட்டம் எங்கே? மூர்க்கன் மூர்க்கன்னு மூச்சுக்கு மூச்சு கதறும் மதமூர்க்கர்கள் எங்கே ?? ஒளிஞ்சிக்கிட்டீங்களா ??
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
18-மே-202107:44:11 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுசெய்தியை நீ முழுவதும் படிக்கலைன்னு தெரியுது...
Rate this:
Cancel
D G Perumal - Gandhipirandhaman,இந்தியா
16-மே-202114:46:38 IST Report Abuse
D G Perumal பிறர்க்கு இன்னா முற்பகல் செயின் தமக்கு இன்னா தாமே வரும்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
16-மே-202112:48:02 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு மத வேறுபாடு இல்லாமல் அனைத்து இந்தியர்களும் குவைத் போன்ற வளைகுடா நாடுகளுக்கு மனித ஆற்றல், தொழில் நுட்ப உதவி என்று சேவை செய்து இருக்கிறார்கள் அதுவும் ஐம்பது ஆண்டுகட்கும் மேலாக அதற்கு குவைத் செய்யும் இந்த உதவிகளை கைம்மாறு என்று சொல்லலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X