சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

ஒத்துழைப்போம்; உயிரைக் காத்துக் கொள்வோம்!

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஒன்றேகால் ஆண்டு ஓடிப் போச்சு... புது வைரஸ், புது வாழ்க்கை முறை, புது மருத்துவம் என எவ்வளவு மாற்றங்கள்!* பண நெருக்கடி, மன நெருக்கடி, என்ன செய்தால் இதிலிருந்து மீளலாம் என்ற தவிப்பு... இதெல்லாம் சாதாரண மக்களுக்கு* பண நெருக்கடி, நேர நெருக்கடி, இட நெருக்கடி, வயிற்றுப்பசி, குடும்பத்தை பார்க்க முடியாத, கவனிக்க முடியாத சூழல், என்ன செய்தால் இந்த உயிரைக் காப்பாற்றலாம் என்ற தவிப்பு...
 ஒத்துழைப்போம்; உயிரைக் காத்துக் கொள்வோம்!

ஒன்றேகால் ஆண்டு ஓடிப் போச்சு... புது வைரஸ், புது வாழ்க்கை முறை, புது மருத்துவம் என எவ்வளவு மாற்றங்கள்!
* பண நெருக்கடி, மன நெருக்கடி, என்ன செய்தால் இதிலிருந்து மீளலாம் என்ற தவிப்பு... இதெல்லாம் சாதாரண மக்களுக்கு
* பண நெருக்கடி, நேர நெருக்கடி, இட நெருக்கடி, வயிற்றுப்பசி, குடும்பத்தை பார்க்க முடியாத, கவனிக்க முடியாத சூழல், என்ன செய்தால் இந்த உயிரைக் காப்பாற்றலாம் என்ற தவிப்பு... இதெல்லாம் மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு
* பண நெருக்கடி, இன்று களமிறங்கவில்லை என்றால் ஊரே நாறிவிடும் என்ற நிலை, பசி, தாகம்... இதெல்லாம் துாய்மை பணியாளர்களுக்கு
* பண நெருக்கடி, மதிப்பு நெருக்கடி, எதைச் செய்தால் நம் மானத்தை காத்துக் கொள்ளலாம்... இதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு.

எவ்வளவு நாள் இந்த மரண பயத்துடன் ஓடி ஒளிவது? தீர்மானமாய் முடிவெடுப்போம்; அரசுக்கு முற்றிலும் ஒத்துழைப்போம்; ஒரே ஒரு ஜீவனாய் நுழைந்து, பல்கிப் பெருகி, ஆட்டிப் படைக்கும் அந்த மாபெரும் அரக்கனை, உலகை விட்டு ஒழிக்க சூளுரைப்போம்.தெம்பில்லை தான்... மருத்துவர்களும், மருத்துவமனைகளும், செவிலியர்களும், நோயாளிகளும் படும் பாட்டை, செய்திகளைச் சேகரித்து வெளியிடும் பத்திரிகையாளர்களாலேயே கண்கொண்டு பார்க்க முடியவில்லை; அனுபவிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் நிலையைச் சிந்தித்து பாருங்கள்!கவச உடைகளுடன், உடல் முழுதும் வியர்வையில் தொப்பலாய் நனைந்தபடி, முகச் சுளிப்பே இல்லாமல் பணியாற்ற வேண்டும்.

'இந்த மருந்து கொடுத்தால், இந்த நோயாளியின் உயிரைக் காப்பாற்றலாம்' என்ற நம்பிக்கையே கொள்ள முடியாமல், ஒரு உயிரைக் காப்பாற்றினால், அது தரும் நிம்மதியில் தன் தெம்பைக் கூட்டி, அடுத்த நோயாளியைக் கவனித்து, பசி, துாக்கம், தாகம் என, எதையும் பார்க்காமல்... உங்களால் ஒரு வேளையாவது இப்படி இருக்க முடியுமா? சிந்தித்து பாருங்கள் மக்களே!

எந்த பணி செய்தாலும், குற்றம் குறை இல்லாமல் இருக்காது. அனைத்து குறைகளையும் ஓரம் கட்டுவோம்.இப்போதைய நமக்கு தேவை குடிக்க தண்ணீர், பசிக்கு உணவு, நோய்வாய்ப்பட்டால் மருத்துவம். இது மூன்று மட்டும் தானே!இவை உங்களுக்கு வீட்டிலேயே கிடைத்து விட்டால், ஒரு மாதம் தாக்குப்பிடிக்க முடியும் அல்லவா? உங்கள் உயிரைக் காப்பாற்ற மட்டுமே இந்த கோரிக்கை, வேறு எதற்காகவும் அல்ல!

பால், அரிசி, பருப்பு, புளி, எண்ணெய், காய்கறி என்று அனைத்தையும், களப் பணியாளர்கள் உங்கள் வீட்டிலேயே கொடுத்து விட்டால், பிரச்னை இல்லை தானே!பத்திரிகைகளை திருப்பினால், கொரோனா செய்தி தான்.'டிவி'யை 'ஆன்' செய்தால், 'இங்கே ஆக்சிஜன் இல்லை; அங்கே மருந்து பற்றாக்குறை; இங்கே மரணம்; அங்கே ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு; அங்கே பிணங்கள் குவியல்' என, எல்லாமே பீதியைக் கிளப்பும் வகையிலேயே உள்ளன. பத்திரிகைகளில் செய்தியாய் எழுதுவதை, வீடியோவாய் காண்பித்து, நொடிக்கு நொடி நம், 'பல்சை' எகிற வைக்கின்றனர்.


latest tamil news
ஊடக நண்பர்களே...


கருத்து சுதந்திரம் குறித்த என்பது, தற்போதைய தலையாய பிரச்னை அல்ல. மக்களின் உயிரைக் காப்பதே நம் முதல் கடமை.எனவே, கொரோனா குறித்த 'நெகட்டிவ்' செய்திகளை தவிர்த்து, சுவாரஸ்யமான, மக்கள் மூளையை வளர்க்கும் செய்திகளை கொடுப்போம். சிரிப்பு வரவழைக்கும் சினிமா காட்சிகளை, இனிமை மிகுந்த பாடல்களை ஒளிபரப்புவோம். சோகத்தை ஏற்படுத்தும் சீரியல்களை விட்டொழிப்போம்.மக்களின் இப்போதைய தேவை, மிக மிக ஆரோக்கியமான மனநிலையே!


மக்களே...


முதலில் இந்த, 'நெகட்டிவ்' சமாச்சாரங்களிலிருந்து வெளியே வருவோம். மருத்துவமனைகளின் நிலை நமக்கு தெரிய வேண்டாம்.'முழு முடக்கம் போட்டால், மக்கள், வியாபாரிகள் அல்லாடுவரே... வியாபாரம் படுத்தால் பணப் புழக்கம் இருக்காதே...' என்ற எண்ணத்தில், அரசு கட்டுப்பாடுகளை மட்டும் தீவிரப்படுத்தியது. ஆனால், அதற்கும் கட்டுப்படாமல் வெளியில் சுற்றினால் எப்படி? உங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டாமா? உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் உயிரைக் காக்க வேண்டாமா?வீட்டிலேயே இருந்தால், நம்மை தொற்று பிடிக்காது.

அப்படி தப்பி தவறி நமக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அரசு கொடுத்திருக்கும் தொலைபேசி எண்களை அழைத்து, நமக்குள்ள அறிகுறிகளை சொல்வோம். எதிர்முனையில் பேசுபவர்கள், நம்மை எங்கு வரச் சொல்கின்றனரோ, அங்கு செல்வோம். அது அனேகமாக, உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவ முகாம்களாக இருக்கும்.மிகச் சிறப்பான முறையில், எல்லா ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். அவர்கள் சொல்வதை, அப்படியே முழு மனதுடன் ஏற்போம்.


அரசு செய்ய வேண்டியது


வீட்டுக்கு வீடு, 'பிட்' நோட்டீஸ் கொடுங்கள். காய்ச்சலோ, வேறு உபாதையோ வந்தால், யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எண் அதில் இடம்பெற வேண்டும்.ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறார். மின் கட்டணம் செலுத்துவது முதல், ரேஷன் வாங்குவது வரை, பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய, தெருவாரியாக இளைஞர்களை பணியமர்த்தி, வேலை செய்யச் சொல்லி, அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கிறார்.

அதுபோல இங்கும், மளிகை மற்றும் காய்கறிகளை, வியாபாரிகளிடமிருந்து வாங்கி, மக்களுக்கு சப்ளை செய்ய வேண்டும். அவர்களை வெளியில் அல்லாட விடக் கூடாது. இளைஞர்களை களப் பணியாளர்களாக அமர்த்தி, அவர்கள் மூலம் எல்லா வீடுகளுக்கும், அனைத்தையும் சப்ளை செய்யுங்கள்.அரசின் செலவு இப்போதைக்கு, மளிகை சப்ளை, பால் சப்ளை, காய்கறி சப்ளை, மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்வது, மருந்து மாத்திரை வாங்கி, தேவையான மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்வது, மருத்துவ பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது, துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது, களப்பணியாற்றும் அதிகாரிகளுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் சம்பளம் கொடுப்பது ஆகியவை மட்டுமாகவே இருக்க வேண்டும்.

ரேஷனில் 2,000 ரூபாய் தருகிறேன் என, கூட்டத்தைச் சேர்க்க வேண்டாம்; எல்லாருடைய வங்கிக் கணக்கு எண்ணும் உங்களிடம் இருக்கிறதே! பின் எதற்கு, பெருமையாக கூட்டம் சேர்த்து, விழா நடத்தி, ரூபாய் கொடுக்கிறீர்கள்? கொரோனா பரவாதா? அடிப்படை விஷயம் தெரியாதா?முதல்வர் நிவாரண நிதிக்கு நானும் காசு தருகிறேன் என, முதல்வரைச் சந்திக்க வைத்து, 'போட்டோ'வுக்கு போஸ் கொடுத்து, சேவை செய்ய வேண்டிய நேரத்தையெல்லாம் வீணடித்து... எதற்கு? ஒரு மாதம் எடுத்துக் கொள்ளுங்கள்; முழு ஊரடங்கு அமல்படுத்துங்கள்; வெல்வோம் கொரோனாவை!
- எஸ்.சண்முகவல்லி,
சமூக ஆர்வலர்.
இ - மெயில்: dmrcni@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
17-மே-202101:03:34 IST Report Abuse
M  Ramachandran இதை படிப்பவர்கள் இந்த செய்தியில் கண்டுள்ளபடி கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்கக் கூடியது முடிந்த வரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எடுத்துஉரைகக்வும் மேலும் இது காற்றில் பரவக்கூடியது என்பதையும் கூறுங்கள்.முக கவசம் எத்துனை அவசியம் என்பது உணருவார்கள்.இந்த பாழா போன சீன தற்குரியால் நாம் எல்லாம் கடினமான நிலையில் உள்ளோம். ஆனால் காங்கிரஸ் தலைமை அவனிடம் கையேந்தி அவனுக்காக ஊழியம் செய்கிறது. அவர்களுக்கு நல்லது ஏதும் கண்ணுக்கு படாது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-மே-202112:32:27 IST Report Abuse
Ramesh Sargam சிறந்த பதிவு. சமூக ஆர்வலர் எஸ்.சண்முகவல்லி அவர்களுக்கு மிக்க நன்றி.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-மே-202112:10:32 IST Report Abuse
Natarajan Ramanathan முதலில் இப்படி சமூக ஆர்வலர் என்ற போர்வையில் கருத்து பதிவிடுவதையும் நிறுத்த வேண்டும். ஸ்டாலின் அரசு சுத்தமாக திறமையே இல்லாமல் விழி பிதுங்குகிறது
Rate this:
karutthu - nainital,இந்தியா
16-மே-202116:02:16 IST Report Abuse
karutthuமுதல்வர் நாற்காலி என்பது முள்படுக்கை அது ஒன்றும் போர்ம் மெத்தை இல்லை என்பது புரிந்திருக்கும் முதல்வன் சினிமாவில் வரும் ஒரு காட்சி .....அர்ஜுன் ரகுவரன் ஐ நேர்காணல்காணும் நிகழ்ச்சியை பார்த்தால் புரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X