பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர்: டில்லியில் 25 பேர் கைது

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்து டில்லியில் போஸ்டர் ஒட்டிய 25 பேரை போலீசார் கைது செய்தனர்.தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து டில்லியில் பல இடங்களில் போஸ்டரில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு
பிரதமர், அவதூறு, போஸ்டர், டில்லி, கைது

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்து டில்லியில் போஸ்டர் ஒட்டிய 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து டில்லியில் பல இடங்களில் போஸ்டரில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
கடந்த புதன் / வியாழக்கிழமைகளில் டில்லியின் கிழக்கே உள்ள கல்யாண்புரியில் 1800 போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதன் பின்னணியில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் இருந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்தனர். தொடர்ந்து இதன் மறுநாள் டில்லியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார், போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 25 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது ஜாமினில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், பெரும்பாலானவர்கள், நேற்று மதியம் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் சட்ட நடவடிக்கைகள் முடிந்த பின்னர் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.


latest tamil news


போஸ்டர்கள் அனைத்தும் ஒரே அச்சகத்தில் அச்சிடப்பட்டதா அல்லது ஒருவரோ / அரசியல் கட்சியோ அச்சிட கூறியதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலரிடம் நடந்த விசாரணையில், சரியான தகவலை தெரிவிக்கவில்லை. இன்னும் சிலர், போஸ்டர் ஒட்டியதற்கு தங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, பணம் கொடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், போஸ்டர் ஒட்டியதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என்பது தெரியவரும் என உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-மே-202106:16:01 IST Report Abuse
Rajagopal இந்தியா இந்த தடுப்பூசிக்கு உற்பத்தி செய்யும் உரிமையை இங்கிலாந்தின் ஆஸ்ட்ரா செனெகா என்ற கம்பெனியிடம் வாங்கும் போது, மற்ற நாடுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தோடு ஏற்றுக்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் படி பல நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அதை மோடி அரசு விவரமாக யாருக்கும் தெரிவிக்கவில்லை. இந்த மோடி அரசின் ஒரு பெரிய குறை என்னவென்றால், அவர்கள் நல்ல திட்டங்களை அமல் படுத்திவிட்டு சும்மா உட்கார்ந்து விடுகிறார்கள். அதைப்பற்றி மக்களுக்கு விவரமாக எதையும் எடுத்து சொல்வதில். இதனால் அரசியல் எதிரிகள், இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, பொய்களையும், புரளிகளையும் எளிதில் பரப்பி விடுகிறார்கள். எல்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டு, குடிமுழுக விட்டு, மோடியோ, இல்லை ஒரு அமைச்சரோ எதோ மன்னிப்பு கேட்பது போல பதில் கொடுக்கிறார்கள். எப்போதும் ஊடகங்களுடனும், மக்களோடும் எல்லாவற்றையும் விவரிக்க ஒரு அதிகாரியோ, அமைச்சரோ தேவை. இவர்கள் நல்ல சட்டங்களை ஏற்படுத்தி விட்டு மேஜைக்கு கீழே போய் ஒளிந்து கொண்டு விடுகிறார்கள். மேலே எறியப்படும் அழுகிய தக்காளிகளை பேசாமல் தாங்கிக்கொண்டு இருந்து விடுகிறார்கள். இந்த கிருமிநாசினிக்கு வந்து கொண்டிருந்த நல்ல பெயரை ஒரு காரணமும் இல்லாமல் மற்றவர்கள் கெடுக்கும்படி வைத்து விட்டார்கள். விவசாயிகள் என்ற போர்வையில் பெரிய முதலைகள் உலகம் பூராவும் பிரகடனம் செய்து, பெயரைக் கெடுத்ததை சன்னல் வழியாக வெறுமனே பார்த்துக்கொண்டிருந்து விட்டு கதவை மூடிக்கொண்டு விட்டார்கள். பாகிஸ்தான் என்றவுடன்தான் இவர்களது முதுகெலும்பு விறைப்பாகிறது.
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
17-மே-202102:46:28 IST Report Abuse
iconoclast இதிலே என்ன அவதூறு ? உண்மை நிலையை உரக்க சொன்னால் அவதூறா ?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
17-மே-202102:07:40 IST Report Abuse
தல புராணம் கைது செய்தது அவதூறு செய்தி என்று அல்ல.. சுவரில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்ற ஓட்டை சட்டத்தை காட்டி.. பக்கத்திலேயே பாஜாக்கா போஸ்டர் ஆயிரம் ஒட்டியிருந்ததை டில்லி ஏவல்துறை கண்டுகொள்ளவில்லை என்பது அடிஷனல் ஹைலைட் காமெடி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X