குஜராத்தில் உயிரிழப்பு அதிகரித்ததற்கான காரணம் என்ன? : சிதம்பரம் கேள்வி

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (123)
Share
Advertisement
காந்திநகர்: குஜராத்தில் கடந்த மார்ச் 1 முதல் மே 10ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உயிரிழப்பு அதிகரித்ததற்கான காரணம் என்ன என்பதை மத்திய அரசும், குஜராத் அரசும் விளக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.,யுமான ப.சிதம்பரம், செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோகில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: குஜராத்
Congress, Gujarat, IncreaseDeaths, DeathCertificate, CovidDeaths, Chidambaram, காங்கிரஸ், குஜராத், உயிரிழப்பு, அதிகரிப்பு, சிதம்பரம்

காந்திநகர்: குஜராத்தில் கடந்த மார்ச் 1 முதல் மே 10ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உயிரிழப்பு அதிகரித்ததற்கான காரணம் என்ன என்பதை மத்திய அரசும், குஜராத் அரசும் விளக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.,யுமான ப.சிதம்பரம், செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோகில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இந்த உயிரிழப்பு அதிகரிப்பு இயற்கையானது என விளக்கம் அளிக்க முடியாது, இது கொரோனா பெருந்தொற்றால் மட்டுமே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் தேதிவரை குஜராத் அரசு சார்பில் 1.23 லட்சம் பேருக்கான இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனாவில் 4,128 பேர்தான் உயிரிழந்தார்கள் என குஜராத் அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 58 ஆயிரம் பேருக்கான இறப்புச் சான்றிதழ்தான் வழங்கப்பட்டது. இறப்புச் சான்றிதழ்களுக்கும், அரசின் அதிகாரபூர்வ கொரோனா உயிரிழப்புக்கும் இடையே உள்ள வேறுப்பாட்டை குஜராத் அரசும், மத்திய அரசும் விளக்க வேண்டும். எவ்வாறு இறப்புச் சான்றிதழ் அதிகரித்தது என்பதை விளக்க வேண்டும்.


latest tamil news


இயற்கையாக உயிரிழப்பு அதிகரித்தது, வேறு காரணங்களால் அதிகரித்து என்று நீங்கள் விளக்கம் அளிக்க முடியாது. மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு அதிகரிப்புக்கு கொரோனா வைரஸ்தான் காரணம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். கொரோனாவில் உயிரிழந்தவர்கள் குறித்த உண்மையான கணக்கை குஜராத் அரசு மறைக்கிறது. கங்கை நதிக்கரையில் ஏறக்குறைய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டபோதும், நதியில் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடல்கள் மிதந்துவந்தபோதும் எங்கள் சந்தேகம் உறுதியாகிவிட்டது.


latest tamil news


எங்கள் சந்தேகம் உண்மையாக இருந்தால், இது ஒரு தேசிய அவமானம், தேசிய அளவிலான சோகமானது என்பதைத் தவிர இருக்க முடியாது. இந்த நாட்டு மக்களுக்கு மத்திய அரசும், குஜராத் அரசும் விளக்கம் அளிக்க வேண்டும், காங்கிரஸ்கட்சியும் இதற்கு விளக்கமும், பதிலும் கோருகிறது. கொரோனா உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் நடத்திவரும் விசாரணையின்போது, எங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அனைத்து மாநில அரசுகளும், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் வழங்கிய இறப்புச்சான்றிதழ் குறித்த விவரங்களை பெற உத்தரவிடக் கோருவோம். இந்த விவகாரத்தை நீண்டநாட்களுக்கு மறைக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
17-மே-202110:24:41 IST Report Abuse
RajanRajan பூமிக்கு பாரமானவங்களை குரானா வேட்டையாடுதுன்னும் கர்மா வினை வேள்வி நடத்துகிறதுன்னும் புரிஞ்சுக்கோ. இதெல்லாம் அதீத ஞானம் வோணும்னு. அது உனக்கு எப்படி எட்டும். அதுக்கெல்லாம் வேற நியதி போ. சும்மா கொளுத்தி போட்டு விளையாடாதே. பஸ்பமாக்கிடும். ஓடி போய்டு இங்கிருந்து.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
17-மே-202104:51:45 IST Report Abuse
Siva Kumar பசி இந்த மாதிரி கேள்வி கேட்பதற்கு காரணம்
Rate this:
Cancel
South Indian - Dublin,யூ.எஸ்.ஏ
17-மே-202102:47:21 IST Report Abuse
South Indian ஒரு பேரிடர் தொற்று நோய் காலத்தில் மற்ற இயற்க்கை காரணங்களால் ஏற்படக்கூடிய மரணங்களும் அதிகமாகும் என்று இந்த படித்த ஹார்வர்டு மேதைக்கு தெரியாத என்ன. முழு அடைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் குறைவுள்ள காலத்தில் தொற்று நோய் சிகிச்சாய்க்காக முக்கியத்துவம் கொடுப்பின் மற்ற நோயில் அவதிக்குள்ளாகுபவர்கள் உதவியின்றி நிலைமை மோசமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இரண்டாவது, அனைவரையும் பரிசோதனை செய்யமுடியாது இயல்பு காலங்களிலேயே மருத்துவ வசதி ஜனதொகைக்கு ஏற்ப இல்லாத நிலையில் பேரிடர் காலத்தில் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கவிடும். காங்கிரஸ் கட்சி சுகாதார அமைப்புகளை மேம்படுத்த என்ன செய்தது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X