அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்: தமிழக அரசு

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு
Remdesivir, Private Hospital, TamilnaduGovt, ரெம்டெசிவிர், தனியார் மருத்துவமனை, தமிழகம், தமிழக அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். தற்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழக மருத்துவ சேவைக் கழகம் மூலமாக போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால், அதனை தவிர்க்க வேண்டியுள்ளது.


latest tamil news
18-ம் தேதி முதல்


இதனால், பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும், நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இந்த மருந்தை வாங்குவதற்கான சீட்டை அளித்து, அவர்களை வாங்கிடப் பணிக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதன்படி, வரும் மே 18ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்கு சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.


latest tamil newsஇவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச் சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் சுகாதாரத்துறை அலுவலற்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். நோயாளிகளுக்கு தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இருவர் கைது


அடையாறு துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கையின் காரணமாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு என சமூக வலைதளங்களில் பதிவிட்ட சென்னையை சேர்ந்த ராஜ்குமார், ஆதித்தன், சையது ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பெரும் மருந்து கடையில் வேலை செய்பவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து இரண்டு ரெம்டெசிவிர் மருந்து மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கதேசம் நாட்டிலிருந்து இறக்குமதி செய்து கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala - chennai,இந்தியா
17-மே-202106:32:48 IST Report Abuse
bala பேச்சு அதிகமாக இருக்கிறது. செயல் குறைவாக இருக்கிறது. முதல்வர் போன் பேசுவது அரசியல் நெடி தெறிக்கிறது. நீங்கள் செய்ய வேண்டிய செயலை செய்யுங்கள். டெலிபோன் ஆபரேட்டர் வேலை செய்ய முதல்வர் வந்தால் சாலை சுத்தம் செய்ய யார் வருவார்கள். இதற்கு தேர்தல் நடக்காமல் இருந்து இருக்கலாம். கோரோனோ பரவாமல் இருந்து இருக்கும்
Rate this:
Cancel
அ.வேல்முருகன் - Salem,இந்தியா
17-மே-202100:44:17 IST Report Abuse
அ.வேல்முருகன் காலதாமதமாக எடுத்த முடிவு என்றாலும் தற்போதாவது இந்த முடிவை எடுத்து அறிவித்தார்களே. பாவம் மக்கள் படாதபாடு பட்டு விட்டார்கள் ரெம்டிசிவர் மருந்திற்காக. அலைக்கழிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
Rate this:
Cancel
Sridharan Venugopalan - bangalore,ஐஸ்லாந்து
17-மே-202100:28:11 IST Report Abuse
Sridharan Venugopalan There are seven Pharmaceutical Companies( Like Cipla, Cadila, Jubliant Sciences, Hetero etc.) making Remidisivir. They have increased their Capacity to manufacture 3 Lakh Vials per Day, which is equivalent to 90 Lakh Vials a month. Each State Government can directly Procure needed Quantity from these Companies and distribute to each District Head Quarters Main Government Medical College and all the Covid care approved Hospitals in that District can be allowed to buy the Vials directly from this Main Medicals college giving the details of the Patient for whom they are buying along with the signature of the Family member of the Patient without making the Public to run around for Remidisivir and save the Patient. TN can buy 10Lakh Vials within 10 days and distribute.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X