பொது செய்தி

தமிழ்நாடு

ரெம்டெசிவிர் தட்டுப்பாடு சமாளிக்க... முதல்வர் ஸ்டாலின் இதை செய்வாரா?

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (114)
Share
Advertisement
சென்னை: 'கொரோனா நோயாளிகளுக்காக, டாக்டர்கள் பரிந்துரை செய்யும் ரெம்டெசிவிர் மருந்தை, கள்ளச் சந்தையில் விற்கும் நபர்கள் மீது காவல் துறை வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.அப்பாவி மக்கள் கொரோனா தொற்றுக்கு மருந்தின்றி உயிருக்குப் போராடும் நிலையில், இரக்கமற்று செயல்படும் மர்ம நபர்கள், ரெம்டெசிவிர்
Remdesivir, TamilnaduCM, Stalin

சென்னை: 'கொரோனா நோயாளிகளுக்காக, டாக்டர்கள் பரிந்துரை செய்யும் ரெம்டெசிவிர் மருந்தை, கள்ளச் சந்தையில் விற்கும் நபர்கள் மீது காவல் துறை வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

அப்பாவி மக்கள் கொரோனா தொற்றுக்கு மருந்தின்றி உயிருக்குப் போராடும் நிலையில், இரக்கமற்று செயல்படும் மர்ம நபர்கள், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். இந்நபர்கள் குறித்து, தகவல் அறியும் மக்கள் அவசர போலீஸ் எண், 100க்கு தெரிவிக்கலாம் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால், அதே வேளையில், அரசின் எச்சரிக்கை மற்றும் போலீசாரின் கண்காணிப்பிற்கு பயந்து, கள்ளச்சந்தைக்காரர்கள் ரெம்டெசிவிர் மருந்தை அதிகளவில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அம்மருந்தகள் புழக்கத்திற்கு வராமல் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news


இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட வேண்டும். அதாவது, 'ரெம்டெசிவிர் மருந்தினை பதுக்கி வைத்திருப்போர், மூன்று நாட்களுக்குள், தங்களின் 'ஆதார்'நகல் இணைத்து, அவற்றை அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் காவல்நிலையங்களில் ஒப்படைத்து, அதற்குரிய ஒப்புகைச் சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம். இப்பதுக்கல் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது. மருந்துக்கான பணத்தை ஒரு வாரத்தில் அரசு அல்லது சுகாதாரத்துறை சார்பில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்' என, அறிவிக்க வேண்டும்.


latest tamil news



அதுமட்டுமின்றி, கள்ளச்சந்தைக்காரர்களிடம் இருந்து மருந்தினைப் பெறுவது குறித்தும், அதற்குண்டான தொகையினை விரைவாக திரும்ப வழங்கிடும் முறை குறித்தும் அரசு தெளிவான விளக்கத்தினையும் வெளியிட வேண்டும். மருந்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு, அதை ஒப்படைக்க கடைசியாக ஒரு வாய்ப்பு அளித்து, பதுக்கல் மருந்துகளையும் வெளியே கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால், பதுக்கல் மருந்துகளும் புழக்கத்திற்கு வந்து தட்டுப்பாடு ஓரளவேணும் குறைய வாய்ப்புள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார். அதேபோல, ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு விஷயத்திலும், அவர் இதேபோல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - மாநிலங்கள் VS ஒன்றிய அரசு,இந்தியா
17-மே-202111:58:33 IST Report Abuse
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி பெருந்தொற்று காலத்தில்.. ஒரு மாநில முதல்வர் எப்படி எல்லாம் செயல்பட வேண்டுமோ அப்படி எல்லாம் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். கசப்புகளை மறந்து, அரசியல் வேறுபாடுகளை தாண்டி எல்லா கட்சிகளையும் கொரோனாவிற்கு எதிரான போரில் ஸ்டாலின் இணைத்துக் கொண்டு இருகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வேக்சின் வாங்க வெளிநாடுகளில் ஆர்டர் செய்தது தொடங்கி ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெமிடிஸ்வர் மருந்துகளை வாங்கி குவித்தது வரை முதல்வர் ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
17-மே-202112:25:35 IST Report Abuse
Dr. Suriyaஅதெல்லாம் கமிஸ்ஸின் வாங்கி கொள்ளை அடிக்கத்தான் என்று மக்களுக்கு தெரியும்.......
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
17-மே-202111:57:10 IST Report Abuse
PANDA PANDI செயற்கை தட்டுப்பாடு செய்திருப்பது DESHA DROKIGAL அவர்களுக்கு வக்காலத்து வேற எப்படி எப்படி. தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது. என்ற அறிக்கை விடணுமா. இப்போ தெரிகிறது யார் செய்திருப்பார்கள்ன்னு. நீங்க படிச்ச ஸ்கூலை MASTER நம்ம தமிழக CM. தமிழ் தாயிக்கு. வெற்றி.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-202111:34:11 IST Report Abuse
Pugazh V சங்கிகளின் மற்றும் அடிமைகளின் கதறல்களும் படிக்கப் படிக்கப் பரவசம். இன்னும் பத்து வருஷத்துக்கு இதேமாதிரி கதற வேண்டியது தான். மத்திய அரசு ஒரு லோடு ரெம்டெஸிவிர் மாநில அரசுக்கு கொடுத்து விட்டு ரெண்டு லோடு தனியார் மற்றும் பதுக்கல் சங்கிகளுக்கு கொடுப்பது அறியாதது போல சில வாசகர்கள் எழுதுவது ஏன்??? பல தனியார் ம.மனைகள் இந்த மருந்து க்கு ஆர்டர் கொடுத்திருக்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X