கேரளாவில் 7 பேரை தாக்கிய கறும் பூஞ்சை

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏழு பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மியூகோமைகோசிஸ் எனப்படும் கறுப்பு பூஞ்சை தொற்று இந்தியாவின் சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. காற்றில் உள்ள பூஞ்சை துகள்களால் ஏற்படும் இந்த நோய், புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பால் நாடு மிகவும் அபாயகரமான சூழலில்
Kerala, BlackFungal, Infection,7People, கறுப்பு பூஞ்சை, கேரளா, பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏழு பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மியூகோமைகோசிஸ் எனப்படும் கறுப்பு பூஞ்சை தொற்று இந்தியாவின் சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. காற்றில் உள்ள பூஞ்சை துகள்களால் ஏற்படும் இந்த நோய், புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பால் நாடு மிகவும் அபாயகரமான சூழலில் இருக்கும் நிலையில், இந்த கறுப்பு பூஞ்சை தொற்றும் பரவி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஏழு பேருக்கு, இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



பாதிக்கப்பட்ட 7 பேரில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்கக் கூடியது எனக் கூறப்படுகிறது. இந்த நோயால், மஹாராஷ்ட்டிராவில் 50 க்கும் மேற்பட்டோரும், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
17-மே-202109:30:22 IST Report Abuse
R Ravikumar மூன்றாம் உலகப்போர் மூன் கூட்டியே தொடங்கி விட்டது . இந்த போர் மனிதர்களுக்கு இடையில் ஆனது அல்ல . இயற்கைகும் / இயற்கை தவறுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான போர் . அல்லது மனிதனின் ஆயுத போரை தடுக்க அல்லது தள்ளிப்போட, கடவுளால், ஞானிகளால் உருவாக்க பட்ட முயற்சியாக இருக்கலாம். இதனை தாண்டியும் உண்மையான உலக போரே கூட நடந்து கொண்டு இருக்கிறது.. என்றும் சொல்லலாம் ,மனிதனால்/அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட உயிரி போராக இருக்கலாம் ..இப்போது யாரும் யாரையும் குற்றம் சொல்ல முடியாததால் நேரடி போராக வெடிக்காமல் இருக்கிறது .எனது பயம் என்னவென்றால் .. இதனுடைய வடிவமைப்பு இரண்டாம் உலக போரின் முன்னர் ஏற்பட்ட குழப்பம் போன்றுதான் இப்போது இருக்கிறது .. எல்லா நாடுகளும் பெரிய போராட்டத்திற்கு / போருக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்கள் . புதிய மதம் ஏற்படலாம். புதிய கண்டுபிடிப்புகள் ஏற்படலாம் . புதிய நாகரிகம் கண்டுபிடிக்க படலாம் . அனால் அதற்க்கு முன்னர் நாயடி / பேயடி வாங்க போகிறோம் . இறைஅருள் காக்கட்டும் .
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
17-மே-202101:01:50 IST Report Abuse
M  Ramachandran இதை படிப்பவர்கள் இந்த செய்தியில் கண்டுள்ளபடி கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்கக் கூடியது முடிந்த வரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எடுத்துரைக்கவும் மேலும் இது காற்றில் பரவக்கூடியது என்பதையும் கூறுங்கள்.முக கவசம் எத்துனை அவசியம் என்பது உணருவார்கள். இந்த பாழா போன சீனநால் நாம் எல்லாம் கடினமான நிலையில் உள்ளோம். ஆனால் காங்கிரஸ் தலைமை அவனிடம் கையேந்தி அவனுக்காக ஊழியம் செய்கிறது. அவர்களுக்கு நல்லது ஏதும் கண்ணுக்கு படாது.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-மே-202119:42:56 IST Report Abuse
Endrum Indian மிகவும் படித்தவர்கள் உள்ள மாநிலம் என்பதால் இப்போது புதுப்புது விதமான பூஞ்சை நோய் அவர்களை டெஸ்ட் செய்கின்றது கொரோன முத தொற்று போல???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X