'என்னையும் கைது செய்யுங்கள்' : ராகுல்

Added : மே 16, 2021 | கருத்துகள் (118)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்., எம்.பி., ராகுல், ‛என்னையும் கைது செய்யுங்கள்' என தெரிவித்துள்ளார்.தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து டில்லியில் பல
Arrest Me Too, Rahul, Covid Poster, Tweets, Critical, PM Modi, காங்கிரஸ், ராகுல், போஸ்டர், டுவிட்டர், பிரதமர், மோடி

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்., எம்.பி., ராகுல், ‛என்னையும் கைது செய்யுங்கள்' என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து டில்லியில் பல இடங்களில் போஸ்டரில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. டில்லியின் கிழக்கே உள்ள கல்யாண்புரியில் 1,800 போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளை பதிவு செய்த போலீசார், போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 25 பேரை கைது செய்தனர்.


latest tamil news


இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கைது நடவடிக்கைக்கு எதிராக பலரும் போஸ்டரில் உள்ள அதே கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தன்னையும் கைது செய்யுமாறு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.,யும், முன்னாள் தலைவருமான ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில், ‛என்னையும் கைது செய்யுங்கள்' எனப் பதிவிட்டு, 'நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்?' என்ற வாசகம் அடங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

காங்., முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டில், 'இந்தியா சுதந்திரமான நாடு என கொண்டாடுங்கள், இங்கு பேச்சுரிமை இருக்கிறது, ஆனால் பிரதமரை எதிர்த்து மட்டும் கேள்வி கேட்க அல்ல,' என பதிவிட்டுள்ளார்.

காங்., பொதுச்செயலர் பிரியங்கா, தேசிய செய்தித்தொடர்பாளர் பவன் கெரா உள்ளிட்டோரும் அதே வாசகம் அடங்கிய புகைப்படத்தை தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthil -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202110:38:43 IST Report Abuse
senthil கொண்டுபோய் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கவும்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
17-மே-202109:51:45 IST Report Abuse
sankar கைது செய்ய மாட்டோம்
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
17-மே-202109:40:13 IST Report Abuse
Thirumal Kumaresan vimarsanam bannalaam aanaal vunnai pol poiyarkalaaga allavaa erukkiraarkal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X