பொது செய்தி

இந்தியா

கிராமங்களில் பரவும் கொரோனா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவின் இரண்டாவது அலை கிராமங்கள், விரிவாக்க பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும் பரவ துவங்கியதை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:*கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சந்தேக நபர்களை ஒரே இடத்தில் இருக்க அனுமதிக்கக்கூடாது.*ஒவ்வொரு கிராமத்திலும்
கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, கிராமங்கள், சிகிச்சை, மத்திய அரசு, வழிகாட்டு நெறிமுறைகள், வெளியீடு, Centre, guideline, Covid-19,  rural, peri-urban,

புதுடில்லி: கொரோனாவின் இரண்டாவது அலை கிராமங்கள், விரிவாக்க பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும் பரவ துவங்கியதை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
*கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சந்தேக நபர்களை ஒரே இடத்தில் இருக்க அனுமதிக்கக்கூடாது.
*ஒவ்வொரு கிராமத்திலும் மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும்.
*அறிகுறிகளுடன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமுதாய சுகாதார அதிகாரி மூலம் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இணை நோய் உள்ளவர்கள், ஆக்ஸிஜன் குறைந்த அளவு உள்ளவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும்.
*கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் நபர்களை, சுகாதார அமைப்புகளிடம் தகவல் தெரிவித்து பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். கொரோனா ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை அல்லது அவரது மாதிரிகளை கொரோனா பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்ய வேண்டும்.


latest tamil news


*80 முதல் 85 சதவீதம் பேர் அறிகுறியற்ற மற்றும் லேசான தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப தேவையில்லை. அவர்களை வீடு அல்லது கொரோனா பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி தனிமைபடுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இதனால், ஒவ்வொரு கிராமத்திலும் தேவையான அளவு பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும் தெர்மோமீட்டர்கள் கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.
*ஒவ்வொரு முறையும் பரிசோதனை முடிந்த பிறகு பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும் தெர்மா மீட்டர்களை துணி அல்லது சானிடைசரில் நனைக்கப்பட்ட துணி மூலம் நன்கு துடைக்க வேண்டும்.

*வீடுகளில் தனிமைபடுத்தி கொண்ட நபர்களை, முன்கள பணியாளர்கள், தன்னார்வலர்கள். ஆசிரியர்கள் மூலம் அடிக்கடி சென்று அவர்களின் உடல்நலன் குறித்து அறிய வேண்டும். அவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ மாஸ்க் பயன்பாடு குறித்து விளக்க வேண்டும்.
*வீடுகளில் தனிமைபடுத்தி கொண்ட அனைவருக்கும் தேவையான மருந்துகளை வழங்க வேண்டும். பாராசிட்டமால் 500 mg மாத்திரை, ஐவர்மெக்டின், இருமல் மருந்து மல்டி வைட்டமின் ஆகியவற்றை வழங்க வேண்டும். உடல்நலனில் மாறுபாடு ஏற்பட்டால், யாரை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் விளக்க வேண்டும்.
*கிராமங்கள், பழங்குடியினர் பகுதிகளில் உள்ள பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய அரங்குகள், மருத்துவமனை அல்லது சுகாதார வசதிகள் அருகில் இருக்கும் பஞ்சாய்து கட்டங்கள், பஞ்சாயத்து நிலம், விளையாட்டு அரங்கத்தில் மேற்கூறை அமைத்து கொரோனா பராமரிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும். இவற்றை, சுகாதார மையங்கள் கண்காணிப்பில் அமைக்கப்படுவதுடன் அருகில் உள்ள கொரோனா சுகாதார மையங்கள் அல்லது கொரோனா சிறப்பு மருத்துவமனை மேற்பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
*இந்த மையங்களில் , ஆக்ஸிஜன் உள்ளிட்ட அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
*ஆரம்ப சுகாதார மையங்கள் அல்லது சமுதாய சுகாதார மையங்கள் அல்லது மாவட்ட துணை மருத்துவமனை ஆகியவை கொரோனா வை நிர்வகிப்பதற்கான கொரோனா சுகாதார மையமாக மாற்றப்பட வேண்டும். இங்கு 30 படுக்கைகள் அமைக்கப்படுவதுடன், கொரோனா அதிகரிப்பை பொறுத்து படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.


latest tamil news



*மாவட்ட மருத்துவமனைகள் அல்லது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க விரும்பும் தனியார் மருத்துவமனைகள் அல்லது அவற்றின் ஒரு பகுதியில், கொரோனா சிகிச்சைக்கு அளிக்க தேவையான ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X