பொது செய்தி

இந்தியா

நாட்டில் இந்த ஆண்டு மீண்டும் அதிகரித்த மின்சார பயன்பாடு

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல கட்டடங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை உண்டாகி இருந்தது. இதனையடுத்து தற்போது மத்திய மின்சாரத்துறை இதுகுறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.கடந்த மே மாதம் முதல்
India, PowerConsumption, FirstFortnight, மின்சாரம், பயன்பாடு, இந்தியா

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல கட்டடங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை உண்டாகி இருந்தது. இதனையடுத்து தற்போது மத்திய மின்சாரத்துறை இதுகுறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் தற்போதுவரை இந்திய மாநிலங்களில் குடிமக்கள் செலவிடும் மின்சாரத்தின் அளவு 19 சதவீதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. மே ஒன்றாம் தேதி வரை 51.67 மில்லியன் யூனிட் மின்சாரம் செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு மே மாதம் முதல் 2020-ம் ஆண்டு மே மாதம் வரை 43.55 பில்லியன் யூனிட் மின்சாரம் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒன்பது மில்லியன் யூனிட் அதிக மின்சாரம் பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil news


கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கி கொரோனா முதல் அலையைத் தொடர்ந்து மத்திய அரசு கடுமையான ஊரடங்கு பிறப்பித்தது. இதன்காரணமாக குறைவான மின்சாரம் செலவாகியது. தற்போது தொழில்துறைகள் மீண்டும் இயங்கி வந்ததால் இந்த ஆண்டு மின்சார பயன்பாடு அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது மாநில அரசுகள் தேவைக்கு ஏற்ப ஊரடங்கை சில நாட்கள் முதல் வாரங்கள் அமல்படுத்துவதால், மீண்டும் மின்சார பயன்பாடு குறையுமா என விவாதம் கிளம்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மே-202114:16:56 IST Report Abuse
ஆரூர் ரங் ஆற்காட்டார்😉 க்கு மந்திரி பதவி தரவில்லை என்று புரிகிறது
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
17-மே-202108:14:08 IST Report Abuse
வெகுளி ஸ்டாலின்தான் வாராரு..... பெட்ரோமாஸ் லைட்டு தாறாரு....
Rate this:
Cancel
17-மே-202107:36:27 IST Report Abuse
ஆப்பு நாடு முழுக்க மின் மயானங்கள் 24 மணிநேரமும் இயங்குனா, மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கத்தான் செய்யும். ஏதாவது ஒரு ஐ.ஐ.டி ஆளுங்களை வெச்சு ஆய்வு நடத்துங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X