பொது செய்தி

இந்தியா

மே.வங்கம்: பல கட்ட தேர்தலால் 40 மடங்கு தொற்று அதிகரிப்பு

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
கோல்கட்டா: மே.வங்க மாநிலத்தில் பல கட்ட தேர்தல் நடத்தப்பட்டதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மே.வங்க மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில் திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பா.ஜ., 77 இடங்களை பிடித்து எதிர்கட்சியாக உள்ளது.இந்த மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ம் தேதி முதல்

கோல்கட்டா: மே.வங்க மாநிலத்தில் பல கட்ட தேர்தல் நடத்தப்பட்டதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



மே.வங்க மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில் திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பா.ஜ., 77 இடங்களை பிடித்து எதிர்கட்சியாக உள்ளது.

இந்த மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ம் தேதி முதல் முதல் கட்ட தேர்தல் நடக்க துவங்கி ஏப்., 29-ம் தேதி வரையில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து உள்ளது. தேர்தல் நடந்து முடிந்த போதிலும் இறுதி கட்ட தேர்தல் பிரசாத்தின் போது கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டதால் தேர்தல் கமிஷன் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்தது. இதனையடுத்து தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரசாரத்தை நடத்தினர்.

இது குறித்து மருத்துவ வல்லுநர் கூறி இருப்பதாவது: தேர்தல் கமிஷன் கடந்த பிப்.,26 ம் தேதி மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தது. அப்போது மாநிலத்தில், கோவிட் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,343 என்ற அளவில் இருந்தது. தற்போது மே.,15-ம் தேதி வரையில் இதன் எண்ணிக்கை 40 மடங்கு அதிகரித்து 1.32 லட்சமாக அதிகரித்துள்ளது.

தலைநகர் கோல்கட்டாவை தவிர்த்து பிற பகுதிகளில் 2,183 என்ற எண்ணிக்கையில் இருந்து 1.06 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 48 மடங்கு அதிகமாகும். கிராமப்புறங்களில் இந்த அளவிற்கு தொற்று அதிகரிக்க காரணம் தேர்தல் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மார்ச் 27 முதல் ஏப்., 29 ம் தேதி வரையில் நடைபெற்ற எட்டு கட்ட தேர்தல் எந்தவித முன் நடவடிக்கை இல்லாமல் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



இது மட்டுமல்லாது கொரோன வைரஸ் உருமாற்றம் அடைந்து உள்ளதாகவும், தற்போது உள்ள ஆர்.டி.பி.சி.ஆர்.சோதனைகளில் தொற்று நோயை கண்டறிய முடியாததும் மற்றும் மக்களும் முறையான சோதனைகள் எடுத்து கொள்ளாததும் காரணம் என தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மாநில புள்ளி விவரங்களின் படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 115 சோதனை ஆய்வகம் இருப்பதாகவும், தினந்தோறும் பல்லாயிரம் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மே-202109:24:37 IST Report Abuse
தமிழ் ஐந்தாம் கட்ட தேர்தலிலேயே மம்தா கூறினார் எஞ்சியிருக்கும் தேர்தலை ஒரேகட்டாமாக நடத்தவேண்டுமென்று. ஆனால் தில்லாலங்கடி வேலைசெய்ய வசதியாக இருக்குமேன்று தேர்தல் ஆணையம் மத்திய அரசோடு சேர்ந்து வீம்புக்காக பழக்கட்டங்களாக வைத்து கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிட்டார்கள்.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
17-மே-202109:01:33 IST Report Abuse
Ellamman தார்மீக பொறுப்பேற்று பிரதமர் ஏதாவது நல்லது நாட்டு மக்களுக்கு செய்வாரா?? எவ்வளவு பெருமிதம்... இது போன்ற கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை என்று??/
Rate this:
Cancel
Dr N K Chandrasekaran - Coimbatore ,இந்தியா
17-மே-202107:03:34 IST Report Abuse
Dr N K Chandrasekaran மேற்குவங்கத்தில் வசித்தவன் என்ற முறையில் கூறுகிறேன்- அங்குள்ள மக்கள் பொறுப்பற்றவர்கள். கலை, இலக்கியம் அங்குதான் செழிப்பாக இருந்தது என்று பீற்றிக் கொள்வார்கள். அது ஒருபக்கம். தேர்தலையே தள்ளி வைத்திருக்க வேண்டும். நம்மால் இந்த நாட்டில் அவசர ஊரடங்கு அன்றி மக்களைக் கட்டுப் படுத்த முடியாது. சட்ட சிக்கலுக்குப் பயந்து கொரோனா சிக்கலில் மாட்டிக் கொண்டோம். மக்கள்தான் காரணம், அவர்களின் கட்டுப்பாடற்ற முறைதான் காரணம். அரசைக் குறை சொல்லிப் பயன் இல்லை. அவசரநிலை பிரகடனம் செய்யவேண்டும். பாகிஸ்தானுடன் சண்டை வந்தால் என்ன செய்வோமோ அதை செய்யவேண்டும். தக்காளி, வெங்காயம், மீன், கறி என்று அலைந்தால் இப்படித்தான்
Rate this:
Raj - Namakkal,சவுதி அரேபியா
17-மே-202112:08:11 IST Report Abuse
Rajசங்கி ..., "தேர்தலையே தள்ளி வைத்திருக்க வேண்டும்" இது மக்கள் செய்யவேண்டிய வேலையா? இல்ல தேர்தல் கமிஷனும், மத்திய அரசுமா? எட்டு கட்டமாக தேர்தலை எதிர்க்கட்சிகள் எதிர்த்தும் திமிரு தனமாக கொரோனாவை பரப்பியது, தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் தானே?...
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-மே-202114:18:25 IST Report Abuse
கல்யாணராமன் சு.மேற்கு வங்கம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என்று பொருத்தி பாருங்கள் ...... ஒற்றுமை புலப்படும் .........
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-மே-202114:21:02 IST Report Abuse
கல்யாணராமன் சு.உபியின் குரல் இவ்வளவு பலமாக ஒலிக்க காரணமென்னவோ ? அதான் திருட்டு கட்சி ஜெயிச்சுடுத்தில்லே ????...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X