பொது செய்தி

இந்தியா

கங்கை ஆற்றில் உடல்கள்: ஆய்வு செய்கிறது ஐ.ஐ.டி,

Updated : மே 18, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி:கங்கை நதிக் கரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதாலும், நதியில் வீசுவதாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆய்வு மேற்கொள்கிறது.உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, உன்னாவ், கான்பூர், பதேபூர், கன்னோஜ் உள்ளிட்ட மாவட்டங்களில், கங்கை நதிக் கரையில் குவியல் குவிய லாக உடல்கள் புதைக்கப்பட்டது
 கங்கை ஆறு, உடல்கள், ஆய்வு,ஐ.ஐ.டி.,

புதுடில்லி:கங்கை நதிக் கரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதாலும், நதியில் வீசுவதாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆய்வு மேற்கொள்கிறது.

உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, உன்னாவ், கான்பூர், பதேபூர், கன்னோஜ் உள்ளிட்ட மாவட்டங்களில், கங்கை நதிக் கரையில் குவியல் குவிய லாக உடல்கள் புதைக்கப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது. இந்த உடல்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் உ.பி., மற்றும் பீஹாரில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள், கங்கை ஆற்றில் வீசி எறியப்பட்ட சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறின. இது போன்ற செயல்களால் நதிக்கும், மண்ணுக்கும் எவ்விதமான ஆபத்துகளை விளைவிக்கும் என்பது குறித்து, உ.பி.,யின் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.,யில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இது குறித்து, துாய்மையான கங்கை நதிக்கான தேசிய திட்டத்தின் ஆலோசகர் பேராசிரியர் வினோத் தாரே கூறியதாவது:கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கங்கை நதியில் வீசுவதால், தொற்று அழிந்துவிடாது. அது நீரில் அடித்து செல்லப்பட்டு உயிருடன் இருக்கும். உ.பி.,யில் அனைத்து மாவட்டங்களிலும் குடிக்கவும், காய்கறி பயிரிடவும், கங்கை நீரை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

உடல்களை நதியில் வீசுவது, ஆற்று படுகையில் புதைக்கப்படுவதை தடுக்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


பிரயாக்ராஜில் பிணக்குவியல்!

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள கங்கை ஆற்று படுகையில், 400 - 500 உடல்கள் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மிக குறைவான ஆழத்தில் உடல்கள் புதைக்கப்பட்டதால், காற்றில் மணல் பறந்து, அழுகிய நிலையில் உடல்கள் வெளியே தெரியத் துவங்கியுள்ளன. இதனால், அந்த பகுதி முழுதும் கடுமையான துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது.

இது, அப்பகுதியில் வசிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 'மக்கள் புனித நீராடும் பிரயாக்ராஜ் கங்கை ஆற்றுப்படுகையில், இதற்கு முன் இது போன்ற சம்பவங்களை பார்த்ததில்லை. கொரோனா இரண்டாவது அலைக்கு பின் தான், இவ்வளவு உடல்களை இங்கு பார்க்கிறோம்' என, இங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
18-மே-202121:13:56 IST Report Abuse
Sundararaman Iyer இறந்த உடல்களை எரித்து சாம்பலாக்க வேண்டிய விறகு நியாயவிலையில் கிடைப்பதில்லை. தவிர சம்ஸ்காரம் செய்து வைக்கும் புரோகிதர்களும் மற்ற சுடுகாட்டு ஊழியர்களும் எகத்தாராக பணம் கேட்கிறார்கள். ஆகவே வேறு வழியின்றி நடுத்தர மக்கள் கூட இந்தமாதிரி ஆற்றில் பிணத்தை விட்டு எளிமையான முறையில் காரியத்தை முடிக்கின்றனர். இதை தடுக்க ஒரே வழி - அரசாங்கமே பிணங்களை ஏற்றெடுத்து உற்றவாறு எரிக்கவோ புதைக்கவோ செய்யவேண்டும்.
Rate this:
Cancel
Money Money - Houston,யூ.எஸ்.ஏ
17-மே-202121:40:51 IST Report Abuse
Money Money தமிழ்நாட்டில் சாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த புதிய அரசிற்கு நிர்வாக திறமை இல்லை. Sad state of affairs
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
17-மே-202120:17:44 IST Report Abuse
தல புராணம் ஒரே நாடு பூரா சுடுகாடு RajanRajan. எல்லாம் ராமராச்சியத்தின் சிறப்பு. தீயசக்திகள் உங்க கும்பமேளா கூட்டம் தான். ஆனால் இறந்தது, சுற்றியிருக்கும் கிராமங்களில் கொத்துக்கொத்தாக சாகும் இந்துக்கள். விறகெரித்து ஈமக்கிரியை செய்யக் கூட வசதியற்ற, இந்து ஏழைகள்.மரியாதையான வாழ்க்கை இல்லை. மரியாதையான சாவும் இல்லை. மரியாதையான கடைசி காரியமும் இல்லை. நாய்களும், கழுகுகளும் அவர்களை பிடுங்கி தின்ன, அவர்கள் செய்த தவறு என்ன? பாசி-ச பாஜாக்காவை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்தது தான். 😡🔥
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
17-மே-202122:09:50 IST Report Abuse
Milirvanஇல்ல.. தல்ல.. உன்னைப்போன்ற கள்ளக்குடியேறிகளை நாட்டினுள் பெருத்துபோக விட்ட அரசியல் சாசனம்தான்.. நாட்டின் வளர்ச்சியை, புற்றீசல் போல ஜனத்தொகை வெடிப்பை கொண்டு பின்னிழுக்கும் பொஸ்தகக்கூட்டம் தான்.. அது சரி தல்ல.. தப்புலீக்கீ'ய பத்தியோ, வங்க வன்முறை பத்தியோ. ரோஹிங்கிய கள்ளக்குடியேறி பத்தியோ பேசலாமே..? அப்போ வாயையும் மூடிக்கிறது ஏன் தல்ல?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X