பொது செய்தி

இந்தியா

ஊரக பகுதிகளை குறி வைக்கும் கொரோனா: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புது டில்லி: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையானது நகர மற்றும் ஊரக பகுதிகளுக்கும் நகர்ந்து வருவதால், மத்திய அரசு ஊரக அளவிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில், கிராம அளவிலான கண்காணிப்பு, பகுதி சுகாதார அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் சிகிச்சை, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கான பயிற்சி வழங்குவது போன்றவை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஊரகப்

புது டில்லி: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையானது நகர மற்றும் ஊரக பகுதிகளுக்கும் நகர்ந்து வருவதால், மத்திய அரசு ஊரக அளவிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.



latest tamil news



அதில், கிராம அளவிலான கண்காணிப்பு, பகுதி சுகாதார அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் சிகிச்சை, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கான பயிற்சி வழங்குவது போன்றவை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் தொற்றுநோயை சமாளிக்க ஆரம்ப சுகாதார உள்கட்டமைப்புகள் ஆயத்தமாக உள்ளதா என்பதை உறுதி செய்யும்படியும் கூறியுள்ளனர்.
மேலும் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குழுவினரின் உதவியுடன், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் இன்ப்ளூயன்ஸா போன்ற நோய் அல்லது கடுமையான சுவாச தொற்று இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். அதனை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம். அறிகுறி இருப்பவர்களுக்கு பகுதி சுகாதார அதிகாரிகளுடன் தொலைபேசி வழி ஆலோசனை மேற்கொள்ளலாம். இணை நோய் இருப்பவர்கள், ஆக்சிஜன் செறிவு குறைவாக இருப்பவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.


பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள், தெர்மோமீட்டர்கள்



தொற்றுநோய் பாதிப்பின் எண்ணிக்கை அதன் உயர்வை பொறுத்து நோய் கண்காணிப்பு திட்ட வழிகாட்டுதல் படி, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிய வேண்டும். கொரோனா நோயாளிகளின் ஆக்ஸிஜன் செறிவை கண்காணிப்பது முக்கியம். இதற்காக, ஒவ்வொரு கிராமத்திற்கும் போதுமான அளவு பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மோமீட்டர்கள் இருக்க வேண்டும்.


latest tamil news



வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளிகள் அறிகுறிகள் தோன்றியதிலிருந்து குறைந்தது 10 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டு தனிமை முடிந்த பிறகு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
17-மே-202110:46:46 IST Report Abuse
S.Baliah Seer புளு காய்ச்சலுக்கும், கோவிட் 19-க்கும் உடல்வலி, நுரையீரல் பாதிப்பு, இரவில் அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஒரே மாதிரியாக உள்ளன. மழை பெய்யும் இடங்கிளில் flu கிருமிகள் உற்பத்தியாகும்போது அவை மூலமும் பிற இடங்களுக்கு தொற்று அதிக அளவில் பரவும். தற்போது மக்கள் பலவித காரணங்களால் நோயால் பாதிக்கப்பட்டும், நாம் கரோனா-வை மட்டுமே நினைக்காமல் மாற்றி யோசிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
16-மே-202122:44:38 IST Report Abuse
Visu Iyer முதல் அலையை சரியாக கட்டுப்படுத்தி இருந்தால் இப்படி இரண்டாவது அலை எப்படி வந்து இருக்கும் என்பது போல இருக்கு ... முதலாவதுக்கும் இரண்டாவதுக்கும் இடைப்பட்ட இடைவெளி அதிகம் இல்லை அதனால் முதல் வந்த போது சரியாக கட்டுப்படுத்த தவறிய அரசை குறை சொல்லி பயன் இல்லை.. இதில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதில் தான் சவால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X