அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேண்டுகோள்! செய்தி,ஊடக பிரிவினருக்கு முதல்வர் ஸ்டாலின்: அச்சுறுத்தாமல் விழிப்புணர்வு கொடுக்க கோரிக்கை

Updated : மே 17, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (51+ 40)
Share
Advertisement
சென்னை:கொரோனா தொற்று பரவல் குறித்து, மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை ஒளிபரப்பும்படி, செய்தி, ஊடகப் பிரிவினருக்கு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.காட்சி ஊடகத்தினருடன், சென்னை தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது: கொரோனா நோய்
வேண்டுகோள்!,செய்தி,ஊடகம்,பிரிவினர், முதல்வர்.ஸ்டாலின்

சென்னை:கொரோனா தொற்று பரவல் குறித்து, மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை ஒளிபரப்பும்படி, செய்தி, ஊடகப் பிரிவினருக்கு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காட்சி ஊடகத்தினருடன், சென்னை தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:

கொரோனா நோய் பரவல் சங்கிலியை துண்டிப்பதற்காக, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி, சிலர் சுற்றி வருகின்றனர். அவர்கள் மீது பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல், கண்டித்து அனுப்ப, காவல் துறைக்கு அறிவுறுத்தி உள்ளோம்.அவசர தேவை இல்லாமல் வெளியில் வருவதை நிறுத்தினால் மட்டுமே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.


பொருளாதார நெருக்கடி

பொதுமக்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு, பொருளாதார நெருக்கடி ஏற்படும். இதை உணர்ந்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பால் விலை குறைக்கப்பட்டுள்ளது.தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதி, மருந்துகள் தடையின்றி கிடைக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

3.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய, சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.மேற்கு வங்கம், துர்காபுரியில் இருந்து, 80 டன் திரவ ஆக்சிஜன், ரயிலில் வந்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் இருந்து, விமானப்படை விமானத்தில், திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் இருந்து, 1,900 காலி சிலிண்டர்கள் வாங்க, சிப்காட் வழியே நடவடிக்கை எடுக்கப்பட்டு, விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டது.


சிறப்பு முகாம்

அதில், 500 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிதாக பல்வேறு ஆலைகளில், ஆக்சிஜன் உற்பத்தியை துவக்க, தொழில் துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசி கேட்டுள்ளோம்.

புதிதாக 7,800 படுக்கைகளை உருவாக்கி உள்ளோம்.நான்கு நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும், அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை மருத்துவ மனை களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களிடம் இருந்து, சுய விருப்பம் அடிப்படையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்படுகின்றன.தொழில் நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசி போட, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை, 14 இடங்களில் ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடியை ஒரு சேர சமாளித்து வருகிறோம்.இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அரசு எடுத்து வரும் முயற்சிகளை, ஊடகங்கள் முழுமையாக எடுத்துரைக்க வேண்டும். இது, அரசியல் விவகாரம் அல்ல; உயிர் காக்கும் விஷயம் என்பதால், கொரோனா விஷயங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிட வேண்டும்.

தமிழக அரசு வெளிப்படைத் தன்மையாக உள்ளது; எதையும் மறைக்கக் கூடாது என, உத்தரவிட்டு உள்ளேன். பல மாதங்களாக மறைக்கும் நிலைமை நீடித்துள்ளது. இப்போது, முழு உண்மையை தெரிவித்து வருகிறோம்.தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். தனியார் ஆம்புலன்ஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், '108' ஆம்புலன்சுக்கு கட்டணம் என, தவறாக செய்தி போடுகின்றனர். இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில், தமிழக அரசு முனைப்பாக ஈடுபட்டாலும், மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதை சரியாக அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில், ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். மக்கள் உயிர் காக்க உறுதுணையாக இருங்கள். அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள். சந்தேகம் இருந்தால், அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டு வெளியிடுங்கள். விழிப்புணர்வு வாசகங்களை பரப்ப வேண்டும்.

'டிவி' தொடர்களில் தோன்றும் நபர்கள், முக கவசம் அணிந்திருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டால், அது, மக்கள் மனதில் ஆழமாகப் பதியும். முக கவசம் அணிவது பாதுகாப்பானது. 'டிவி'க்களில் தொடர் நாடகங்கள், செய்திகள் ஒளிபரப்பும் போது, விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட வேண்டும். நீங்கள் வெளியிடும் செய்திகள், மக்களை பயத்தில் ஆழ்த்தி விடக்கூடாது; விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால், கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வர முடியும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


விழிப்புணர்வு வாசகங்கள்

தமிழக அரசு வெளியீடு'டிவி'க்களில் ஒளிபரப்ப, கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை தமிழக அரசு தயார் செய்துள்ளது.

முக கவசம் உயிர் கவசம்;

முறையான முக கவசம் அணிவோம், கொரோனாவை முற்றிலும் தவிர்ப்போம்;
சமூக இடைவெளி காப்போம், உறவுகளுடன் வாழ்வோம்;
முகம், கை சுத்தம் பேணுவோம்; கொரோனாவை தோற்கடிப்போம்.

அவசியமின்றி வெளியே வர வேண்டாம், அருகே மரணத்தை அழைக்க வேண்டாம்;

கூடிப் பேசுவதை தவிர்ப்போம், ஒட்டுமொத்த சமுதாயத்தைக் காப்போம்;

மூச்சுப் பயிற்சி செய்வோம், கொரோனாவை வெல்வோம்;

நித்தம் நீராவி பிடி, கொரோனாவை விரட்டி அடி என்பது உட்பட ஏராளமான வாசகங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன.இவற்றை, 'டிவி'க்களில் ஒளிபரப்பும்படி முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (51+ 40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மே-202122:15:27 IST Report Abuse
குமார் போன வருஷம் என்னா பேச்சு பேசுனீங்க. ஊசி போட்டா செத்து போய்டுவாங்கனு புரளியைக் கிளப்பி விட்டீங்க.. இப்ப மக்கள் கொத்து கொத்தா சாகறாங்க.. இனிமேலாவது மக்களுக்கு நல்லது செய்ற வழியைப் பாருங்க
Rate this:
Cancel
17-மே-202119:05:25 IST Report Abuse
சாம் உனக்கு வந்தா இரத்தம்... எடாப்படிக்கு வந்தா தக்காளி சட்னியா??
Rate this:
Cancel
A P - chennai,இந்தியா
17-மே-202117:19:19 IST Report Abuse
A P இவரின் நல்ல முயற்சிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரு மாதத்துக்கு முன் இது போன்ற நல்ல பேச்சுக்கள் பேசாமல், இப்போது நல்ல பேச்சு மட்டுமே பேச முடிகிறது . எதிர் வரிசையில் இருந்தால் தனது ஊடகங்கள் மூலம் பயமுறுத்தலான செய்திகளை மட்டுமே திரும்பத் திரும்ப ஒளிபரப்பலாம். இப்போது யாரும் பயமுறுத்தும் செய்திகளை ஒளிபரப்ப வேண்டாம் என்றால் , வடிவேலு வசனம்தான் க்ஞாபகம் வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X