பொது செய்தி

தமிழ்நாடு

நகரில் 'ஓகே'; கிராமத்தில் கேட்பாரில்லை

Added : மே 16, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் நகரில், போலீசார் கெடுபிடியை அதிகரித்தனர். எனினும் கிராமங்களில் மக்கள் கட்டுப்படாமல் சுற்றித் திரிந்தனர்.முழு ஊரடங்கான நேற்று, போலீசார், அன்னுார் நகரில் உலா வந்தவர்களின், ஐந்து இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.நேற்று, கைகாட்டியில், ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்களிடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பேசுகையில்,
 நகரில் 'ஓகே'; கிராமத்தில் கேட்பாரில்லை

அன்னுார்:அன்னுார் நகரில், போலீசார் கெடுபிடியை அதிகரித்தனர். எனினும் கிராமங்களில் மக்கள் கட்டுப்படாமல் சுற்றித் திரிந்தனர்.முழு ஊரடங்கான நேற்று, போலீசார், அன்னுார் நகரில் உலா வந்தவர்களின், ஐந்து இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நேற்று, கைகாட்டியில், ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்களிடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பேசுகையில், ''கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவமனையை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே வராமல் இருப்பது அவசியம்.ஒரு முறை எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறை வாகனம் பறிமுதல் செய்யப்படும். கோர்ட் உத்தரவுக்கு பிறகே வாகனம் திருப்பித் தரப்படும்," என்றார்.
அன்னுார் கைகாட்டியில், போலீசாரின் கெடுபிடியால், நேற்று நகரில் இரு சக்கர வாகனங்கள் இயங்குவது சற்று குறைந்தது. எனினும், பட்டறை, அ.மேட்டுப்பாளையம், புதுப்பாளையம், பசூர், நல்லி செட்டிபாளையம் உட்பட பல கிராமங்களில், பிள்ளையார் கோவில், கன்னிமார் கோவில் உட்பட கிராமப்புற கோவில்களின் முன்புறம், கூட்டம் கூட்டமாக மக்கள் உட்கார்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. மேலும், ராம் நகர், கோவை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உட்பட பகுதிகளில், கொரோனாவின் ஆபத்தை உணராமல், இளைஞர்கள் கும்பல், கும்பலாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X