பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டான்லி பொது மருத்துவ பிரிவு

Added : மே 16, 2021
Share
Advertisement
பிராட்வே : ஸ்டான்லி மருத்துவமனையில், அனைத்து மருத்துவர்களும் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், பொதுமருத்துவ பிரிவு, தற்காலிகமாக பாரதி மகளிர் கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை, ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனை புறநோயாளிகளின் பிரிவுகள்

பிராட்வே : ஸ்டான்லி மருத்துவமனையில், அனைத்து மருத்துவர்களும் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், பொதுமருத்துவ பிரிவு, தற்காலிகமாக பாரதி மகளிர் கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை, ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனை புறநோயாளிகளின் பிரிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.நரம்பியல், காது, -மூக்கு,- தொண்டை, எலும்புமுறிவு, சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட 44 சிறப்பு பிரிவுகளின் பொது மருத்துவம், தற்காலிகமாக பாரதி மகளிர் கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ளது.இங்கு எக்ஸ் - ரே, இ.சி.ஜி., ரத்த பரிசோதனை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, 15 மருத்துவர்களும், 20 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுஉள்ளனர். நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், அவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கவும் வசதி செய்யபட்டுள்ளது.கூடுதலாக 100 படுக்கை வசதிபாரதி மகளிர் கல்லூரியில், 300 படுக்கை வசதியுடன் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கு கூடுதலாக, 100 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள, கொரோனா சிகிச்சை மையத்தை, ஹிந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க., - எம்.பி., தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். நோயாளிகளிடம் தேவைகளை கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X