பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' போடலைன்னா 'ரிஸ்க்': நமக்காகத்தான் சொல்றாங்க...

Added : மே 16, 2021
Share
Advertisement
சூலுார்:''முகக்கவசம் தான், தற்போது நமக்கு உயிர் கவசம். அதனால், மறக்காமல் முகக்கவசம் அணியுங்கள்,'' என, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சூலுார் போலீசார் சார்பில், கொரோனா விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வாரமாக, சூலுார், சுல்தான்பேட்டை, செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பல பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சூலுார் -
 'மாஸ்க்' போடலைன்னா 'ரிஸ்க்': நமக்காகத்தான் சொல்றாங்க...

சூலுார்:''முகக்கவசம் தான், தற்போது நமக்கு உயிர் கவசம். அதனால், மறக்காமல் முகக்கவசம் அணியுங்கள்,'' என, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சூலுார் போலீசார் சார்பில், கொரோனா விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வாரமாக, சூலுார், சுல்தான்பேட்டை, செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பல பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சூலுார் - திருச்சி ரோட்டில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில், இன்ஸ்பெக்டர் முருகேசன் பேசியதாவது:கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர், தும்பும் போதும், இருமும் போதும் வெளிவரும் நீர்த்திவலைகள் வாயிலாக மற்றவருக்கு எளிதாக பரவும். அதனால், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முகக்கவசம் தான், தற்போதைய நிலையில் நமக்கு உயிர் கவசமாக உள்ளது. முகக் கவசம் இல்லாமல் வெளியில் வராதீர்கள். குறைந்தது, 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பது நல்லது. ஊரடங்கு அமலில் உள்ளதால், விதிகளை பின்பற்றி வீட்டில் இருப்பது தான் பாதுகாப்பானது. விதிகளை மீறி வாகனங்களில் சுற்றுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X