சென்னையில் வார்டுக்கு 2 காய்ச்சல் முகாம்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் வார்டுக்கு 2 காய்ச்சல் முகாம்கள்

Added : மே 16, 2021
Share
சென்னை : ''சென்னையில், ஒவ்வொரு வார்டிலும் இரண்டு காய்ச்சல் முகாம்கள் என, 400 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.இது குறித்து கமிஷனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக, மாநகராட்சி

சென்னை : ''சென்னையில், ஒவ்வொரு வார்டிலும் இரண்டு காய்ச்சல் முகாம்கள் என, 400 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.இது குறித்து கமிஷனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக, மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.இதுவரை, ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 324 முகாம்கள் நடத்தப்பட்டு, 65 லட்சத்து, 92 ஆயிரத்து, 859 பேர் பயனடைந்து உள்ளனர். இவர்களில் 18 லட்சத்து, 46 ஆயிரத்து, 773 நபர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் சிறப்பு முகாம்களில் பொதுமக்களின் உடல் வெப்பநிலை, உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யப்படும். காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறி உள்ள நபர்களுக்கு பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.கபசுர குடிநீர் மற்றும் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக, தொற்று பாதித்த நபரை கண்டறிந்து தனிமைப்படுத்தி, தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.தொற்று அதிகம் உள்ள இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த காய்ச்சல் முகாமில் டாக்டர், நர்ஸ் மற்றும் உதவியாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். வார்டுக்கு ஒரு காய்ச்சல் முகாம் என்ற நிலையில், தற்போது இரண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சியில் தினந்தோறும் 400 காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X