பொது செய்தி

தமிழ்நாடு

கருவேலமரத்தால் கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்

Added : மே 16, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடியில் இருந்து எமனேஸ்வரம் வழியாக நயினார்கோவில் செல்லும் ரோட்டோரம் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்துக்குஉள்ளாகும் நிலை உள்ளது.எமனேஸ்வரம், ஜீவாநகர், குணப்பனேந்தல், அண்டக்குடி, வல்லம் வழியாக நயினார்கோவில் செல்ல வேண்டும். இப்பகுதியில் ரோட்டின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் அடர்ந்து ரோட்டை

பரமக்குடி : பரமக்குடியில் இருந்து எமனேஸ்வரம் வழியாக நயினார்கோவில் செல்லும் ரோட்டோரம் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது.

வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்துக்குஉள்ளாகும் நிலை உள்ளது.எமனேஸ்வரம், ஜீவாநகர், குணப்பனேந்தல், அண்டக்குடி, வல்லம் வழியாக நயினார்கோவில் செல்ல வேண்டும். இப்பகுதியில் ரோட்டின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் அடர்ந்து ரோட்டை ஆக்கிரமித்து உள்ளது.மேலும் ஜீவா நகர் அருகில் இடது பிரதான கால்வாய் முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் கால்வாய் பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தடுமாறி வருகின்றனர்.மேலும் கால்வாய் முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் கலக்கிறது.

ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில், கால்வாய் வழியாக கண்மாய்களுக்கு பிரித்து விடப்படும் தண்ணீர் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.விவசாயிகள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.ஆகவே ரோட்டோரம் மற்றும் கண்மாய்களில் அடர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X