பொது செய்தி

தமிழ்நாடு

18 வயதை கடந்தவர்களுக்கு 3 நாட்களில் தடுப்பூசி போடும் பணி: சுகாதாரத்துறை அமைச்சர்

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை:" ''தமிழகத்தில், 18 முதல், 45 வயது வரை உள்ளவர்களுக்கு, தடுப்பூசி போடும் பணி, மூன்று நாட்களில் துவங்கும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை, விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லுாரியில், 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. மையத்தை திறந்து வைத்த, சுகாதாரத்துறை அமைச்சர்

சென்னை:" ''தமிழகத்தில், 18 முதல், 45 வயது வரை உள்ளவர்களுக்கு, தடுப்பூசி போடும் பணி, மூன்று நாட்களில் துவங்கும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.



latest tamil news


சென்னை, விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லுாரியில், 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. மையத்தை திறந்து வைத்த, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, நான்கு நாட்களில் தீரும். சென்னையில், 250 புதிய அவசர ஊர்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், 450 க்கும் மேற்பட்ட, '108' ஆம்புலன்ஸ்கள், கொரோனா பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இன்னும் மூன்று நாட்களில், 18 முதல் 45 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார். இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்.கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான். இதனால், 5 கோடி பேருக்கு அடுத்த, மூன்று மாதத்தில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்


latest tamil news


சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''நோயாளிகள் வீட்டிலேயே தன்னிச்சையாக ஆக்சிஜனை பயன்படுத்த கூடாது. மருத்துவர் முன்னிலையில், மருத்துவமனைகளில் மட்டுமே, ஆக்சிஜன் எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

சென்னை மாநகராட்சி கமிஷனர்ககன்தீப் சிங் பேடி கூறுகையில்,''சென்னையில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பயமின்றி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். உயிர் சேதத்தை தவிர்க்க தடுப்பூசி உதவும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
17-மே-202114:22:47 IST Report Abuse
திராவிஷ கிருமி விஜயபாஸ்கர் இருந்த இடத்தில் இந்தாளு... ஐயோ... கடவுளே... தமிழ்நாடு விளங்க வாய்ப்பே இல்லை...
Rate this:
Cancel
Chandramouli - Mumbai,இந்தியா
17-மே-202113:38:43 IST Report Abuse
Chandramouli மணலை கூட கயிறாக வார்த்தை ஜாலத்தின் மூலம் மக்களை ஏமாற்றும் வல்லமை படைத்தவர்கள் தி மு க வினர். 60 வயது உள்ளவர்களுக்கே முதல் டோஸ் மருந்து இல்லை. இரண்டாம் டோஸுக்கு எப்போ என்பதே கேள்விக்குறி. இதில் 18 வயதினருக்கு 3 நாளில் என்று சொல்கிறார். ஓரளவுக்கு பொய் சொல்லலாம் . இப்படியா பொய் சொல்வது
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
17-மே-202112:00:09 IST Report Abuse
Sivagiri அதுக்குள்ளே உலக டெண்டர் போட்டு வாங்கியாச்சு ? ? ? . . . சொல்லவே இல்ல . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X