பொது செய்தி

இந்தியா

புதிய வைரசை அழிக்கிறது: கோவாக்சினுக்கு அங்கீகாரம்

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றை அழிப்பதில், 'கோவாக்சின்' தடுப்பூசி மிக அதிக செயல்திறனுடன் உள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.தெலுங்கானாவின், ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்த தடுப்பூசியின் செயல் திறன்

புதுடில்லி: பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றை அழிப்பதில், 'கோவாக்சின்' தடுப்பூசி மிக அதிக செயல்திறனுடன் உள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.



latest tamil news


தெலுங்கானாவின், ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்த தடுப்பூசியின் செயல் திறன் குறித்து தேசிய தொற்று நோயியல் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. இந்த ஆய்வு முடிவுகள், தொற்று நோய்கள் குறித்து மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு உள்ளன.

இது குறித்து, பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பிரிட்டனில் கண்டறியப்பட்ட பி.1.1.7 மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 ஆகிய அதிக வீரியம் உடைய புதிய வகை உருமாறிய வைரஸ்களை அழிப்பதில், கோவாக்சின் தடுப்பூசியின் செயல் திறன் சிறப்பாக உள்ளது.இது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


இதற்கிடையே, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 1.84 கோடி தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், 'மேலும் 51 லட்சம் 'டோஸ்' தடுப்பூசிகள், இன்னும் மூன்று நாட்களுக்குள் மாநிலங்களுக்கு வினிேயாகிக்கப்படும்' என மத்திய சுகாதாரத்துறை நேற்று தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni - chennai,இந்தியா
17-மே-202111:27:13 IST Report Abuse
agni இந்திய மண்ணின் தயாரிப்பு சிறப்பாக தான் இருக்கும்
Rate this:
Naattamai - Permbalur,ஆஸ்திரேலியா
17-மே-202115:06:51 IST Report Abuse
Naattamaiஇருக்கும் மனுசனா kolarthula...
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
17-மே-202108:42:23 IST Report Abuse
Naresh Giridhar mikka makilchi
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
17-மே-202107:15:33 IST Report Abuse
Nallavan Nallavan வேறொரு செய்தியின் தலைப்பு """" புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா? """"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X