பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: கமல் கட்சியின் எதிர்காலம்?

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (91)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :சுந்தாசா, கும்பகோணம், தஞ்சை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:இப்பகுதியில், வாசகர் ஒருவர், 'யார் சப்பாணி?' என்ற தலைப்பில் கடிதம் எழுதிஇருந்தார். அதில், அரசியலில் இறங்காத நடிகர் ரஜினியை, கோழை என்றும்; அரசியலில் களமிறங்கிய நடிகர் கமலை, துணிச்சல்காரர் என்றும் குறிப்பிட்டு
ithu, ungal, idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



சுந்தாசா, கும்பகோணம், தஞ்சை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

இப்பகுதியில், வாசகர் ஒருவர், 'யார் சப்பாணி?' என்ற தலைப்பில் கடிதம் எழுதிஇருந்தார். அதில், அரசியலில் இறங்காத நடிகர் ரஜினியை, கோழை என்றும்; அரசியலில் களமிறங்கிய நடிகர் கமலை, துணிச்சல்காரர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

கமல் தன்னை, திராவிட கட்சிகளுக்கு மாற்று என அறிவித்துக் கொண்டார்; ஊழலுக்கு எதிராக கட்சி துவங்கியதாகவும் தெரிவித்தார். அதனால் தான், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட படித்த இளைஞர்கள், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு எதிராகவே அவரின் பிரசாரம் அமைந்தது. அவர், தி.மு.க.,வின் 'பி - டீம்' என வர்ணிக்கப்பட்டதை நிரூபிக்கும் விதமாக, தேர்தல் முடிந்த கையோடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.தேர்தல் காலத்தில், மய்யத்தின் பொருளாளர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை பற்றி, அவர் எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை.

தமிழகத்தில், இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக களம் காணும் போது, பெருத்த அளவில் மக்கள் பணி செய்திருக்க வேண்டும். தேர்தலுக்கு இரு மாதம் முன் வரை, தனியார் 'டிவி'யில், 'ரியாலிட்டி' நிகழ்ச்சி நடத்தினார். அதன் பின், மக்களை சந்தித்தார். அவர் மீது, மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை வரும்?ரஜினி அரசியலில் இறங்க விருப்பப்பட்டார்; முடியவில்லை என்றதும் விலகிக் கொண்டார். இதற்காக ரஜினியை குறை சொல்வது தவறானது. அவரால் யாருக்கும் நஷ்டம் இல்லை.


latest tamil news


ரஜினியிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும், கமல் ஆதரவு கேட்டு வந்தார். அவர் அசைந்து கொடுக்கவில்லை. கமலை பற்றி, அவரின் நண்பருக்கு தெரியாதா என்ன!தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வளரும் கட்சி, தோல்வியிலிருந்து தான் அதிகமாக பாடம் கற்க வேண்டும். அதை விடுத்து, கட்சியிலிருந்து விலகுபவரை, 'துரோகி' என்றெல்லாம் குற்றஞ்சாட்டுவது, கட்சித் தலைவருக்கு அழகல்ல!சர்வாதிகார போக்கு, பகுதி நேர அரசியல் எல்லாம், தமிழகத்தில் அதிக நாள் எடுபட்டதே இல்லை. தேர்தலுக்கு பின், கமல் எடுக்கும் நடவடிக்கை தான், மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-202103:55:12 IST Report Abuse
Raja🇮🇳 indian 🇮🇳hindu. கோவிந்தா கோவிந்தா தான்.நாத்திகம் பேசுபவனுடைய கட்சி அதோ கதி தான். இனிமேல் பிக்பாஸ் நடத்தி வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான்.பாவம் தொண்டர்கள் இவனை நம்பி.🇮🇳JAIHIND🇮🇳
Rate this:
Cancel
Venkat - Chennai,இந்தியா
18-மே-202100:46:16 IST Report Abuse
Venkat பொட்டி வாங்கின ஒடனே சபையை களைச்சுட்டாரு...அவளவித்தான்
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
17-மே-202123:38:48 IST Report Abuse
Ram இருக்கும் ம நீ ம கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு தாவும் தன்னம்பிக்கையும் தைரியமும்இந்த வந்து முருகன்கு தான் உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்னை கோலை என்றோ ... மொள்ளமாரி என்றோ யாரும் என்ன வேண்டாம் .... ஆமா நம்ம நெஸ்ட் மீட்டிங் .... எங்க எங்க எங்க .... அவ்வூ அவ்வூ - 200 sweat box theridichu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X