தொடர்கிறது இஸ்ரேல் தாக்குதல்; ஒரே நாளில் 42 பேர் பலி

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
காசா சிட்டி: ஹமாஸ் அமைப்புக்கு எதிரான, மேற்காசிய நாடான இஸ்ரேலின் வான் வழி தாக்குதல் தொடர்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.காசா பகுதியில் பல கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு யூதர்கள், கிறிஸ்ததுவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால், யூதர்கள் பெரும்பான்மையினராக உள்ள இஸ்ரேலுக்கும்,

காசா சிட்டி: ஹமாஸ் அமைப்புக்கு எதிரான, மேற்காசிய நாடான இஸ்ரேலின் வான் வழி தாக்குதல் தொடர்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.latest tamil news


காசா பகுதியில் பல கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு யூதர்கள், கிறிஸ்ததுவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால், யூதர்கள் பெரும்பான்மையினராக உள்ள இஸ்ரேலுக்கும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில், இரு நாட்டின் எல்லையில் உள்ள காசா மலைக்குன்று உள்ளிட்ட பகுதிகள், ஹமாஸ் எனப்படும் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஜெருசலத்தில் உள்ள ஒரு வழிபாட்டு தலம் தொடர்பாக சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் வெளியேற்றியது.இதையடுத்து, இஸ்ரேல் மீது, காசாவில் இருந்து, ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.காசா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி கட்டடங்கள், முக்கிய சாலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தி வருவதற்கு, பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், காசாவில், நேற்று ஒரு நாள் மட்டும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடக்கும் மோதலில், ஒரு நாளில் ஏற்பட்டுள்ள அதிக பலி இதுவாகும். இதைத் தவிர 50க்கும் மேற்பட்டார் காயமடைந்து உள்ளனர்.சில உயரமான கட்டடங்களும் தகர்க்கப்பட்டுள்ளன. ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்கள் இந்தக் கட்டடங்களில் பதுங்கியிருந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களான யெஷியே சின்வர், அவரது சகோதரர் முகமது ஆகியோர் தங்கியிருந்த வீடும், இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது.அவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது பாதுகாப்பாக வெளியேறி விட்டனரா என்பது குறித்த தகவல், இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுவரை நடந்துள்ள தாக்குதலில், 41 குழந்தைகள், 23 பெண்கள் உள்பட, 145 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதையடுத்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இதற்கான முயற்சியை துவங்கிஉள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை கண்டித்து, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில், பாலஸ்தீன ஆதரவாளர்கள், இஸ்ரேல் துாதரகம் அருகில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹமாஸ்தான் பொறுப்பு!தற்போது நடக்கும் மோதலுக்கு பொறுப்பேற்க வேண்டுமானால், அதற்கு ஹமாஸ் அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தான் முதலில் தாக்குதலை நடத்தினர். சாமானிய மக்களை கேடயமாக பயன்படுத்தி, இஸ்ரேலின் சாமானிய மக்களை தாக்குகின்றனர்.

இங்குள்ள சாமானிய மக்களை பாதுகாப்பதுடன், காசாவில் உள்ள சாமானிய மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் எங்களுடைய பதில் தாக்குதல் இருந்து வருகிறது; இது முடிவல்ல; துவக்கம். பெஞ்சமின் நேதன்யாகுஇஸ்ரேல் பிரதமர்ஊடகங்கள் கண்டனம்காசாவில் உள்ள, '-அல்ஜசீரா' உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களின் அலுவலகங்கள் உள்ள, 12 மாடி கட்டடத்தை இஸ்ரேல் விமானப்படை தகர்த்துள்ளது. ஒரு மணி நேரத்துக்குள் மூன்று ஏவுகணைகள் வாயிலாக இந்தக் கட்டடம் தகர்க்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாகவும், அவர்களுடைய உளவு பிரிவு இந்தக் கட்டடத்தில் இருந்து செயல்படுவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.


latest tamil news


இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்கான காரணத்தை ஆதாரத்துடன் தெரிவிக்கும்படி, அவை வலியுறுத்தியுள்ளன. இந்த தாக்குதலுக்கு, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ கட்டரசும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்கு, இந்திய பத்திரிகையாளர் அமைப்பான, 'எடிட்டர்ஸ் கில்டு'ம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-202106:51:32 IST Report Abuse
ஆப்பு கொசுறு செய்தி... இஸ்ரேலுக்கு 750 மில்லியன் டாருக்கு நவீன தளவாடங்களை ஜோ பைடன் சமீபத்தில் வித்திருக்காரு.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
17-மே-202118:39:58 IST Report Abuse
r.sundaram முஸ்லிம்களுக்கு தங்களது மதம்தான் பிரியதே தவிர, தாய் தந்தையர்கள் கூட அல்ல. இராணக்கம் என்பது அவர்களிடம் கிடையாது. அனால் வெளியில் பேசும்போது இஸ்லாம் அன்பின்பாற்பட்ட மதம் என்று மட்டும் சொல்வார்கள். அனால் உண்மை அதுவல்ல. அடுத்தவர்கள் தங்கள் மதத்தை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், அடுத்தவர் மதத்தை மதிப்பார்களா என்றால் இல்லை. கடவுளுக்கு உருவம் இல்லை என்பவர்கள், மெக்காவின் படத்தை பற்றி பேசினால் கோபம் வருவது ஏன்? இறைவன் அந்த படத்தில் இருக்கிறானா? அப்படி என்றால் அது உருவ வழிபாடு இல்லையா? என்னே இந்த முரண்பாடு? சுற்றிலும் முஸ்லீம் நாடுகள், நடுவில் இஸ்ரேல் என்ற ஐநா அமைத்துக்கொடுத்த ஒரு நாடு. இவ்வளவு காலம் அந்த நாடு நிலைத்து நிற்கிறது என்றால் அது மிகப்பெரிய அதிசயமே. எனவே அந்த நாடு தன்னை பாதுகாத்துக்கொள்ள போராடுகிறது அவ்வளவே.
Rate this:
Cancel
17-மே-202117:31:47 IST Report Abuse
theruvasagan பிரான்ஸ் நாட்டில்.ஒரு கார்டூன் போட்டதற்காக அந்த பத்திரிகை ஊழியர்களை ஈவிரக்கமில்லாமல். மதவெறியர்கள் படுகொலை செயதபோது இந்த எடிட்டர்ஸ் கில்டு எந்த பொந்துல பதுங்கியிருந்தது. எதிரியால் தனக்கு ஒரு பங்கு நஷ்டம் என்றால் எதிரிக்கு பத்து மடங்கு இழப்பு இருக்கவேண்டும் என்பதே இஸ்ரேல் கொள்கை. எந்த ISIS ஹமாஸ் தாலிபான் பப்பும் இஸ்ரேல் கிட்ட வேகாது. அடிச்சு துவைச்சு பொட்டலம் கட்டிடுவார்கள்.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-மே-202111:34:02 IST Report Abuse
Dr. Suriyaஅது மட்டுமா ஒரு ஆசிரியரை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X