பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல், 'இ - பதிவு' முறை அமல்; ஆவணங்கள் பதிவு சிக்கல் நீக்கப்படுமா?

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் செய்ய, 'இ- - பதிவு' பெறுவது, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.அதேநேரத்தில், ஆவணங்கள் பதிவுக்கான சிக்கலை, நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமைகளில், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மற்ற நாட்களில்,

சென்னை: தமிழகத்தில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் செய்ய, 'இ- - பதிவு' பெறுவது, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.latest tamil news


அதேநேரத்தில், ஆவணங்கள் பதிவுக்கான சிக்கலை, நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமைகளில், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மற்ற நாட்களில், தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

அறிமுகம்அதன்படி, நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மாநிலம் முழுதும் அமல்படுத்தப் பட்டது. இன்று தளர்வுகளுடன் கூடிய, முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இன்று காலை 10:00 மணி வரை மட்டுமே, அத்தியாவசிய பொருட்களின் விற்பனை கடைகள் திறந்திருக்கும். மேலும், மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு வெளியிலும், அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்றவற்றுக்கு மட்டும் பயணம் செய்யலாம்.அதற்கும், 'இ- - பதிவு' அவசியம். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு, https://eregister.tnega.org என்ற, இணையதளத்தில் இ- - பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்காக, 'இ - பாஸ்' முறை அறிமுகம் செய்யப்பட்டது. விண்ணப்பித்தவர்கள், செல்ல வேண்டிய இடத்தின் முகவரியுடன், அதற்கான ஆவணங்களையும், 'அப்லோடு' செய்ய வேண்டும்.அதை ஆய்வு செய்த அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கும்போது இ - பாஸ் வழங்கப்பட்டது. இந்த நடைமுறையில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால், தற்போது, இ - பாஸ் முறை எளிமையாக்கப்பட்டு, இ - பதிவு முறை அமலாகி உள்ளது.அதற்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்க, முதலில் மொபைல் போன் எண்ணை கொடுத்து, பாஸ்வேர்டு வாயிலாக உள் நுழைய வேண்டும். பின், வெளிமாநிலங்களில் இருந்து பயணமா; தமிழகத்துக்குள் பயணமா என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.


latest tamil news


அதில், மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பை சார்ந்த காரியங்கள், திருமணம் என, நான்கு வகையான காரணங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளன. தெளிவுபடுத்தவில்லைஅதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்; ஆனால், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தவில்லை. திருமணம் என்றால் பத்திரிகையை சமர்ப்பிக்கலாம். இறப்புக்கு செல்ல, இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்றால், அதை உடனே பெற்று சமர்ப்பிக்க இயலாது. எனவே, அவசர தேவைக்காக வெளியூர் செல்வோர், எளிதாக இ- - பதிவு செய்ய, எந்தெந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்ற தகவலை, தமிழக அரசு அறிவிப்பதோடு, அதை சமர்ப்பிப்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RIN -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202120:40:40 IST Report Abuse
RIN In sun tv news I heard today it is made so simple and easy to access and get, but the ground reality is different.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மே-202117:17:06 IST Report Abuse
Endrum Indian பாவம் எதிரிக்கட்சியாக இருந்த போது எதிர்த்தையெல்லாம் ?அச்சு அசலாக அதையெல்லாம் நீயே செய்யவேண்டியிருக்கு????பரிதாபம்
Rate this:
Cancel
RAMESH - CHENNAI,இந்தியா
17-மே-202117:09:23 IST Report Abuse
RAMESH i have tried multiple times to apply e-pass thru concern website under medical emergency category. there is no submit button to submit the details. am wondering how they confirmed and published the link without proper checking? after that tried to complaint this issue to CM help line center 1100 there also line disconnected after line connected ( i mean wait until one of representative will answer your call) pavam people..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X