60% மக்களுக்கு தடுப்பூசி போட்ட நாட்டிலும் கொரோனா அதிகரிப்பு!

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
விக்டோரியா: இந்திய பெருங்கடலில் மொரீசியஸ் நாட்டிற்கு அருகே அமைந்துள்ள செசல்ஸ் நாட்டில், 60% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.தீவு தேசமான செசல்ஸ் நாட்டில் தமிழர்களும் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பெரிய நவசக்தி விநாயகர் கோவில் ஒன்றே இருக்கிறது. இந்த தீவின் மொத்த மக்கள் தொகை 98 ஆயிரம் ஆகும்.

விக்டோரியா: இந்திய பெருங்கடலில் மொரீசியஸ் நாட்டிற்கு அருகே அமைந்துள்ள செசல்ஸ் நாட்டில், 60% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.latest tamil news


தீவு தேசமான செசல்ஸ் நாட்டில் தமிழர்களும் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பெரிய நவசக்தி விநாயகர் கோவில் ஒன்றே இருக்கிறது. இந்த தீவின் மொத்த மக்கள் தொகை 98 ஆயிரம் ஆகும். இங்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பெரியளவில் தடுப்பூசி இயக்கத்தை தொடங்கினர். தற்போது வரை மக்கள் தொகையில் 61.4% பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கைவிட்டனர். சுற்றுலாவை சார்ந்தே அந்நாட்டின் 72% வருமான என்பதால், நெகடிவ் டெஸ்ட் முடிவுகளுடன் வருபவர்களை தனிமைப்படுத்தாமல் அனுமதித்தது.

அந்த சமயத்தில் நாட்டில் 3,800 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. 16 பேர் இறந்திருந்தனர். அதன் பின்னர், தற்போது மொத்த பாதிப்பு 9,184 ஆக உயர்ந்தது. இறப்பு எண்ணிக்கை 32 ஆனது. வியாழன் நிலவரப்படி செயலில் உள்ள தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,700 ஆகும். அவர்களில் 33% பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தடுப்பூசி பெற்றவர்கள் இறக்கவில்லை!

செசல்ஸ் மக்களுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு போடப்பட்டுள்ளது. 57% மக்களுக்கு சினோபார்மும், 43% மக்களுக்கு கோவிஷீல்டும் போடப்பட்டுள்ளன. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 20% பேர் தடுப்பூசி போட்டவர்கள். ஆனால் அவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படவில்லை, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யாரும் இறக்கவில்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது.


latest tamil newsஎல்லோருக்கும் தடுப்பூசி தேவை!

உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்ரிக்க அலுவலகத்தைச் சேர்ந்த திட்ட இயக்குனர் ரிச்சர் மிஹிகோ கூறியதாவது: செசல்ஸின் தரவுகள், கொரோனா தடுப்பூசிகள் நோயின் தீவிரத்தை தடுப்பது, மருத்துவமனையில் சேர்வது மற்றும் இறப்பை தடுப்பதில் மிகச் சிறப்பாக உள்ளன. எல்லோரும் பாதுகாக்கப்படும் வரை நோய் பரவும் என்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayalakshmanan S - CHENNAI,இந்தியா
17-மே-202112:55:33 IST Report Abuse
Vijayalakshmanan S தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டவர்களும் பாதிக்கப்பட்டதற்கு அந்த அரசு தகுந்த பாதுகாப்பு முறைகளை கைடைபிடிக்காதது காரணம்
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
17-மே-202110:44:46 IST Report Abuse
Sivaraman எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் புரியவில்லையே முகக்கவசம் இடைவெளி கைகழுவும் பழக்கம் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் தேவை என்று மருத்துவர்கள் விஞ்ஞானிகள் எத்தனை முறை கூறி கூறியிருப்பார்கள் . அரசியல் வாதிகள் பேசும் பேச்சு மனதில் பதியும் அளவிற்கு இவர்கள் பேச்சு பதியவில்லை . அந்தோ பரிதாபம் .
Rate this:
agni - chennai,இந்தியா
17-மே-202113:23:37 IST Report Abuse
agniஉண்மை தான்.முகக்கவசம் சமூக இடைவெளி பழக்கத்தை மக்கள் கைவிட்டதால் தான் நம் நாட்டில் இன்றைக்கு இந்த மோசமான நிலையில் உள்ளது.உருமாறி கொரோனாவுக்கு நிரந்தர மருத்துவ தீர்வு என்ற ஒன்று வரும் வரை முகக்கவசம் இடைவெளி கைகழுவும் பழக்கத்தை உலக மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டியது தான்....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-202114:10:38 IST Report Abuse
தமிழவேல் அரசியல்வாதிகள் பேசும் பேச்சு மட்டும் மனதில் பதிவது உண்மை. அந்த அரசியல்வாதிகளும் பேசும் முன் முன்மாதிரிகளாக இருந்திருந்தால், இந்த நிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டிருக்க மாட்டோம்....
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
17-மே-202109:34:03 IST Report Abuse
raghavan வெறும் தலைப்பை மட்டும் படிப்பவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மாட்டார்கள். செய்திக்கு ஏற்றபடி தலைப்பை மாற்றுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X