பொது செய்தி

இந்தியா

ரெம்டெசிவிர் தட்டுப்பாடு; மாநில அரசுகளே பொறுப்பு

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: ''கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் 'ரெம்டெசிவிர்' மருந்து, மாநிலங்களுக்கு போதிய அளவில் அனுப்பப்பட்டுள்ளன. ''அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த மருந்து கிடைப்பதை, மாநிலங்களே உறுதி செய்ய வேண்டும்,'' என, மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறிஉள்ளார்.வினியோகம்கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது.

புதுடில்லி: ''கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் 'ரெம்டெசிவிர்' மருந்து, மாநிலங்களுக்கு போதிய அளவில் அனுப்பப்பட்டுள்ளன. ''அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த மருந்து கிடைப்பதை, மாநிலங்களே உறுதி செய்ய வேண்டும்,'' என, மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறிஉள்ளார்.



latest tamil news




வினியோகம்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இந்நிலையில், வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளுக்கும் கடும் தடுப்பாடு ஏற்பட்டுஉள்ளது.இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளதாவது:மாநிலங்களின் தேவையை உணர்ந்து, ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பை அதிகரித்துள்ளோம். மாநிலங்களுக்கான வினியோகமும் உயர்த்தப்பட்டுள்ளது.


latest tamil news



கடந்த, ஏப்., 23 முதல், மே 23ம் தேதி வரையிலான ஒரு மாதத்துக்கு, மாநிலங்களுக்கு 76 லட்சம் குப்பிகள், ரெம்டெசிவிர் மருந்து அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளன. அதில், மஹாராஷ்டிராவுக்கு அதிகபட்சமாக, 14.92 லட்சம் தரப்பட்டுள்ளது.தமிழகத்துக்கு 3.5 லட்சம்; கர்நாடகாவுக்கு 10 லட்சம்; டில்லிக்கு 2.8 லட்சம்; உத்தர பிரதேசத்துக்கு 6.25 லட்சம்; குஜராத்துக்கு 5.10 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய அளவு இந்த மருந்து கிடைப்பதை, அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மே-202122:16:49 IST Report Abuse
ஆப்பு கங்கையில் பொணம் மிதந்தால் கங்கைதான் பொறுப்பு. இது எப்பிடி இருக்கு?
Rate this:
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
17-மே-202112:26:29 IST Report Abuse
Lawrence Ron ///தமிழகத்துக்கு 3.5 லட்சம் கர்நாடகாவுக்கு 10 லட்சம் \\\\ இது எந்தவகைல உங்களுக்கு ஞாயமா படுது உ
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-202116:27:07 IST Report Abuse
தமிழவேல் அங்கே கொரோனா அதிகமாக இருக்கலாமே......
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
17-மே-202111:38:31 IST Report Abuse
Sivagiri மருந்துகளையும் ரேஷன் போல வாங்க வேண்டுமா ? போன மாசம் வரை கடைகளில் தாராளமாக கிடைத்த மருந்து இப்போ எங்கே போனது ? . . . இந்த மாசம் சிஸ்டம் ரொம்ப மாறிப் போச்சோ ? . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X