பொது செய்தி

இந்தியா

புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா?

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : நம் நாட்டில் தென்படும், பி.1.617 வகை கொரோனா வைரசுக்கு எதிராக, 'ஆன்டிபாடி' எனப்படும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறன், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்கு குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரசுக்கு எதிராக, தற்போது நம் நாட்டில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.கொரோனா வைரசில் பல உருமாறிய
Corona Virus, Covid 19, Vaccine, India Fights Corona

புதுடில்லி : நம் நாட்டில் தென்படும், பி.1.617 வகை கொரோனா வைரசுக்கு எதிராக, 'ஆன்டிபாடி' எனப்படும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறன், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்கு குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரசுக்கு எதிராக, தற்போது நம் நாட்டில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.கொரோனா வைரசில் பல உருமாறிய வகைகளுக்கு எதிராக இந்த தடுப்பூசியின் செயல்பாட்டு திறன் குறித்து, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசிய வைரஸ் மையம் ஆகியவை ஆய்வு செய்து வருகின்றன.ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள், கடந்தாண்டு ஏப்.,ல் இந்தியாவில் தென்பட்ட, பி1 வகை கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டது.அதன்பின், கொரோனா வைரஸ் பல வகைகளில் உருமாறியுள்ளது. பி.1.1.7 எனப்படும் பிரிட்டன் வகை, பி.1.351 எனப்படும் தென்னாப்ரிக்க வகை, ப்பி 2 எனப்படும் பிரேசில் வகை மற்றும் மஹாராஷ்டிராவில் முதலில் தென்பட்ட, பி.1.617 வகை என, பல உருமாறிய வகைகள் உள்ளன.


latest tamil news


தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், பி1 வகை வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடியது.அதனுடன் ஒப்பிடுகையில், தற்போதுள்ள, பி.1.617 வகைக்கு எதிரான அவற்றின் செயல்பாடு, பாதியாக குறைந்துள்ளது. அதாவது, இந்த தடுப்பூசிகளால், ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறன் பாதியாக குறைந்துள்ளது. ஆனாலும், தற்போதைய சூழ்நிலையில், கொரோனாவைத் தடுப்பதற்கு இந்த இரண்டு தடுப்பூசிகள் தான் சிறந்த ஆயுதம்.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் செயல்திறன் பாதியாக குறைந்தாலும், வைரஸ் பாதிப்பை தடுப்பதில் பெரிய பாதிப்பு இல்லை. 10 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அளவுக்கு குறைந்தால் மட்டுமே கவலைப்பட வேண்டும்.இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மே-202113:20:17 IST Report Abuse
CM Prabhakaran தடுப்பூசி போட்டவர்களை முட்டாளாக்கும் செயல்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
17-மே-202110:56:33 IST Report Abuse
தல புராணம் கும்பமேளா வைரஸ் ... சும்மாவா
Rate this:
17-மே-202114:09:07 IST Report Abuse
ஆரூர் ரங்நீ தரஹா வில் சாம்பிராணி போட்டு 😉பாவா கிட்ட மந்திரிச்சுக்க . ஜகாத் கொடுத்து விடு...
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
17-மே-202107:16:14 IST Report Abuse
siriyaar கத்தி சரியில்லை இருந்தாலும் இதை வச்சுதான் காயகறி நறுக்கனும்னு சொல்லறாங்க. எப்படியோ பிலவ வருஷமும் காலி. வைரஸ் விடறவனை சரிசெய்யாமல் இருந்தால் அவன் அடுத்தடுத்து புதிய வகைகளை வெளியிடத்தான் செய்வான். தடுப்பூசி வந்தால் அதைவிட வீரியம் மிக்கது வைரஸ் வரும். பிரச்சினை தடுப்பூசி கண்டுபிடிப்பதல்ல யார் வைரஸ் வெளியிடுகிறார்கள் என்று கண்டுபிடித்தால் மட்டுமே இனி உலகம் பழைய நிலைக்கு வரும்.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
17-மே-202113:07:34 IST Report Abuse
Darmavanதுரோகிகள் வாயில் நல்ல சொல்லும் இல்லை நல்ல எண்ணமும் இல்லை....
Rate this:
Senthil - Bangalore,இந்தியா
17-மே-202114:38:13 IST Report Abuse
Senthilவைரஸ் விட்டது சீனா அப்படின்னு உலகத்துக்கே தெரியும், யாருமே வாயை திறந்து எதுவுமே பேசவில்லை, அவன் இதை விட கடுமையான வைரஸ் விட்டால் மொத உலகத்துக்கே அழிவு தான், சீனாவை தவிர, அவன் மட்டும் அதுக்கு மருந்து தயாரித்து சீனர்களை காப்பாற்றி கொள்வான், உலகில் உள்ள அணைத்து நாடுகளும் சீனா வுக்கு எதிரே ஒன்று சேர வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X