பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நிவாரணம்: குவியுது நிதி

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (123)
Share
Advertisement
சென்னை: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, அனைத்து தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில், பல்வேறு தரப்பினரும், முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். நேற்று முன்தினம், பட்டர்பிளை காந்திமதி அப்ளையன்சஸ் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் சேஷாத்திரி, சென்னை சில்க்ஸ்
Tamilnadu, CM, Relief Fund, தமிழகம், முதல்வர், நிவாரண நிதி, நன்கொடை

சென்னை: முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, அனைத்து தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில், பல்வேறு தரப்பினரும், முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். நேற்று முன்தினம், பட்டர்பிளை காந்திமதி அப்ளையன்சஸ் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் சேஷாத்திரி, சென்னை சில்க்ஸ் மேலாண்மை இயக்குனர் நந்தகோபால், ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை வேந்தர் வெங்கடாசலம் ஆகியோர் தலா, ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன், 25 லட்சம்; லீப் கிரீன் எனர்ஜி பி.லிட்., நிர்வாக இயக்குனர் தேவ்ஆனந்த், 50 லட்சம் ரூபாய் வழங்கினர்.


latest tamil news



என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் மகுந்தா ராகவா ரெட்டி, ஒரு கோடி; மேன்சன் கன்சல்டன்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் சுந்தர், 50 லட்சம்; ஆர்தொமெட் மருத்துவமனை நிறுவனர் சுபேர்கான், 10 லட்சம்; எடிட்டர் மோகன், 10 லட்சம்; இயக்குனர் வெற்றி மாறன், 10 லட்சம்; கனா மகப்பேறு மருத்துவமனை டாக்டர் அசோக்சிகாமணி, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர். வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், 1.25 கோடி ரூபாய்; பொன்னம்பல அடிகளார், 10 லட்சம் ரூபாயை வங்கி பரிவர்த்தனை வழியே, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
22-மே-202113:31:34 IST Report Abuse
Rafi வசூலாகும் நன்கொடைகள் வெளிப்படை தன்மையுடன் அரசு வெளியிட்டு வருகின்றது, பிரதமரின் பேரை பயன்படுத்தி வசூலாகும் p m care பிரைவேட் அமைப்பு என்று சொல்லிவிட்டு அதற்கு வசூலாகும் பல ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு முறையான கணக்குகளை கேட்க முடியாத சூழ்நிலையில், திரு ஸ்டாலின் அவர்களை பாராட்ட கடமை பட்டுள்ளோம்.
Rate this:
Cancel
Henry baskar - penang,மலேஷியா
19-மே-202112:54:55 IST Report Abuse
Henry baskar எல்லா நல்ல உள்ளங்களுக்கும் மக்களுக்காக நிதி கொடுத்து உதவியதற்கு கரம் கூப்பி ஏழை எளிய மக்களின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
18-மே-202102:32:48 IST Report Abuse
தல புராணம் சங்கி மற்றும் ஆடீம்கா நண்பர்களுக்கு நல்ல செய்தி.. அமெரிக்காவிலிருந்து ராணுவ விமானத்தில் இரண்டு லட்சம் ஜெலுசில் பாட்டில்களும், அதே அளவு பர்னாலும் இறக்குமதி செய்துள்ளோம்.. கட்சி உறுப்பினர் அட்டையை காண்பித்து தேவையான அளவு பதுக்கி வைத்துக்கொள்ளவும்.. நன்றி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X