பொது செய்தி

இந்தியா

மே.வங்கத்தில் 2 அமைச்சர்கள் கைது; சிபிஐ நடவடிக்கையால் மம்தா அதிர்ச்சி

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
கோல்கட்டா: நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் மேற்கு வங்கத்தின் 2 அமைச்சர்களை சிபிஐ கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கேள்விப்பட்ட மம்தா கட்சி தொண்டர்கள் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். மத்திய பாதுகாப்பு படையினருடன் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014 ல் டில்லியில் இருந்து கோல்கட்டாவுக்கு சென்ற நாரதா செய்தி போர்ட்டலின்
NaradaBriberyCase, TMC, Ministers, CBI, Arrested, FirhadHakim, WestBengal,

கோல்கட்டா: நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் மேற்கு வங்கத்தின் 2 அமைச்சர்களை சிபிஐ கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கேள்விப்பட்ட மம்தா கட்சி தொண்டர்கள் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். மத்திய பாதுகாப்பு படையினருடன் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014 ல் டில்லியில் இருந்து கோல்கட்டாவுக்கு சென்ற நாரதா செய்தி போர்ட்டலின் பத்திரிகையாளர் ஒருவர் தம்மை தொழிலதிபர் எனக் கூறி, அங்கு முதலீடு செய்ய உதவுமாறு திரிணமுல் அமைச்சர்கள் 7 பேர் உள்ளிட்ட பலருக்கு லஞ்சமாக பணம் கொடுத்து, அதை பதிவு செய்தார்.
இந்த உரையாடல் ஒலிப்பதிவு கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தற்போது அமைச்சர்களாக உள்ள சுப்ரதா முகர்ஜி மற்றும் பிர்ஹாத் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களும் அடக்கம். இவர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கார் அனுமதி வழங்கினார்.


latest tamil news

என்னை கைது செய்யுங்கள் மம்தாஇந்நிலையில், இன்று (மே 17) காலை 9 மணியளவில், சிபிஐ அதிகாரிகள், பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி ஆகியோரின் வீட்டிற்கு சென்று அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனைத்தொடர்ந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மதன் மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரையும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி, சிபிஐ அலுவலகத்திற்கு சென்று, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னை கைது செய்யுங்கள் என மம்தா கூறினார்.
அடுத்த சில நிமிடங்களில், அமைச்சர்கள் பிர்ஹாத் ஹக்கீம் மற்றும் சுப்ரதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது. இதனால் கோபமடைந்த மம்தா, ‛சபாநாயகர் மற்றும் மாநில அரசின் அனுமதியின்றி அமைச்சர்கள், அதிகாரிகளை கைது செய்யலாம் என்ற எந்த விதியும் இல்லை. எங்கள் அதிகாரிகள், அமைச்சர்களை கைது செய்தால், என்னையும் கைது செய்ய வேண்டும்,' என அதிகாரிகளிடம் கூறினார்.
ஏற்கனவே தேர்தல் வன்முறை தொடர்பாக ஆளும் திரிணமுல் காங்கிரஸ், மத்திய பா.ஜ., அரசுக்கு இடையே பிரச்னை இருந்து வரும்சூழலில், அமைச்சர்களை சிபிஐ கைது செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
17-மே-202122:03:13 IST Report Abuse
தல புராணம் சாணக்கியரின் அரசியல் ஆட்டம்..
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
18-மே-202104:09:39 IST Report Abuse
தல புராணம்சாணக்கியருக்கு கை அரிக்க ஆரம்பித்திருக்கிறது...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-மே-202111:14:10 IST Report Abuse
Malick Rajaசாணக்கியரின் அரசியல் ஆட்டம் .. இதெல்லாம் எடுபடாது ..கொரோனாவின் படிப்பினையை புரியாதாவர்கள் .. பரிதாபத்திற்குரியவர்கள் என்று பின்னர் செய்திவரும் .....
Rate this:
Cancel
Meiyur Adhi Varadarajan - chennai,இந்தியா
17-மே-202121:09:49 IST Report Abuse
Meiyur Adhi Varadarajan I am very much surprised, same Mamta ji last time block central force when central team wants to arrest police commissioner / DGP. How nominated CM reasonable for those doing mischief during their earlier team or their personal mistake. Instead of going to cbi office she should go Court and face the case directly. It will wrong precedents to other state. even for this act Governor or High court condemn her move.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
17-மே-202118:49:16 IST Report Abuse
r.sundaram லோக்கல் போலீஸ் மூலம் இந்த சி பி ஐ அதிகாரிகளை மம்தா கைது செய்ய வில்லையா? அதிசயமாகத்தான் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X