அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: தமிழக அரசு புறக்கணிப்பு ஏன் ?

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (111)
Share
Advertisement
சென்னை: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடனான ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் இன்று (மே 17) காணொலியில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கல்வி அமைச்சர்களுடனும் மத்திய அரசு கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என
NEP, TamilnaduGovt, Boycott, புதிய கல்விக் கொள்கை, தமிழக அரசு, புறக்கணிப்பு, மத்திய அரசு, ஆலோசனை

சென்னை: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடனான ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் இன்று (மே 17) காணொலியில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கல்வி அமைச்சர்களுடனும் மத்திய அரசு கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை மத்திய அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.


latest tamil news


இதனையடுத்து புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைக்க முடியாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதை விட கல்வித்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துங்கள் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். அந்தக் கடிதத்திற்கு பதில் ஏதும் வரவில்லை. எனவே அவர்கள் நடத்தும் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. மும்மொழி கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி என திணிப்பு நடப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - chennai,இந்தியா
17-மே-202123:28:49 IST Report Abuse
Bala இந்திய அரசு உருது, அரபு மற்றும் ஹீப்ரு மொழிகளையும் பள்ளிகளில் கற்றுக்கொடுக்க வேண்டும். நிச்சயமாக எதிர்ப்பு இருக்காது. எதிர்க்க துணியமாட்டார்கள். செய்யுமா மத்திய அரசு?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-202123:06:03 IST Report Abuse
Pugazh V இந்தி , சமஸ்கிருத த்தை திணிப்பது ஏன் தெரியுமா? நடுத்தர பிரிவு , கிராமப்புற, ஏழைப்பட்ட , பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவமாணவிகளை ஏழாவது எட டாவது வகுப்பிலேயே இந்தி / சமஸ்கிருத த்தில் ஃபெயிலாக்கி அவர்கள் மேற்கொண்டு படிப்பதைத் தடுக்கவும், அதனால் நல்ல வேலைவாய்ப்பு களை இழக்கவும், பிறகு ஒரீ குறிப்பிட்ட இனத்தவரை மட்டும் பாஸாக்கி நல்ல உத்தியோகங்களில் உட்கார வைக்க நடக்கும் சதி. இந்தியைத் தாய்மொழி யாகவே கொண்ட லட்சக்கணக்கான என்ஜினீயர் கள், எம் காம், பி.காம் பிஎஸ்சிபட்டதாரிகள் வேலைகிடைக்காமல் அலைகிறார்கள். இதற்கு என்ன விளக்கம் ? இந்தி தெரிந்தும் பட்டதாரி யாக இருந்து ம் வேஐ கிடைக்கவில்லை யே? இதில் தமிழ் நாட்டிலிருந்து இந்தி படித்து வேலை கிடைக்குமாம்..இந்தி படக்கலைன்னா கிடைக்காதாம். இன்னொருவர் எழுதறார்- பிற மாநிலத்தவர்கள் நாலு மொழி பேசுவதால் தாழ்வு மனப்பான்மை வருகிறதாம். ஏன்? மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமே. மொழி என பது அறிவு அல்ல. சிலர் நாலைந்து மொழி பேசுவதாக சொல்கிறீர்களே அந்த நாலந்தில் எத்தனை பேர் தமிழ் பேசறான்?? மும்மொழி திட்டம் இருக்கும் எத்தனை மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் படிக்கிறார்கள்? உடனே...ஆ...மெஜாரிட்டி இந்தி என்று சொல்பவர்களுக்கு : "எங்கள் தெருவில் 14 வீடுகள். இதில் 12 வீடுகளில் மாட்டுக்கறி உண்பவர்கள். மெஜாரிட்டி என்பதால்..மீதி 2 வீட்டில் உள்ளவர்களும் பீஃப் சாப்பிட வேண்டுமா? 8 வீடுகளில் கிறிஸ்தவ ர்கள். எனவே மீதி 6 வீட்டுக்காரர்களும் சர்ச்சுக்கு போக வேண்டும் என்று கட்டாய ப் படுத்தலாமா?
Rate this:
18-மே-202105:46:41 IST Report Abuse
மனுநீதிநல்ல ஆராய்ச்சி. இப்படியே இன்னும் 5 வருடங்கள் பேசிக்கொண்டு இரு உருப்பட்டு விடலாம்....
Rate this:
18-மே-202106:09:14 IST Report Abuse
Saikumar C Krishnaயாரு சார் இந்தியை படினு கட்டாயபடுத்துரா. இந்தியும் ஒரு பாடமாக offer பண்ணப்படும். வேண்டாம் என்றால அந்த மாணவனோ, மாணவியோ படிக்க வேண்டாமே. திணிக்கிறாங்க திணிக்கிராங்கனு மிரள வேண்டாம். மூன்றாவது மொழி கற்ப்பது அவசியம். அது இந்தியோ, சமஸ்கிரதமோதான் இருக்கனுமா என்ன? வேறொரு இந்திய மொழிதான் இருக்கட்டுமே. நான் தமிழன், வீட்டில் தமிழில் தான் பேசுவேன். இதோ உங்களுக்கு பதிலும் தமிழில் தான் பதிவிடுகிறேன். ஆனால் எனக்கு ஆங்கிலம், இந்தி, கன்னடம் நன்றாக பேச படிக்க எழுத தெரியும். இது எனக்கு பெருமளவில் என் Professional வாழ்க்கைக்கு உதவுகிறது....
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
18-மே-202111:33:30 IST Report Abuse
N.K நடுத்தர, ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் படிப்பதற்கு முன்பாகவே, தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே அவர்கள் ஃபெயில் ஆகிவிடுவார்கள் என்று கூறுவது உங்கள் மமதையை காட்டுகிறது. /// ஒரீ குறிப்பிட்ட இனத்தவரை மட்டும் பாஸாக்கி நல்ல உத்தியோகங்களில் உட்கார வைக்க நடக்கும் சதி// அப்படிப்பார்த்தால் ஜாதி ரீதியில் இடஒதுக்கீடு அளிப்பதும் அதுபோன்ற சதிதானே...
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
18-மே-202111:34:59 IST Report Abuse
N.K இந்தி திணிப்பை எதிர்க்கவேண்டும். கடுமையாக. ஆனால் அது பள்ளிக்கூடங்களில் அல்ல. மற்ற இடங்களில்....
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-மே-202111:43:30 IST Report Abuse
Dr. Suriyaதிறமைசாலியான படிக்கிற புள்ளைங்க, எப்படி நீங்க தடுத்தாலும் படிச்சிடும் புகழ்.. நானே கூரைவீட்டில் இருந்து, சிமினி விளக்கில் மற்றும் தெரு விளக்குல படிச்சு தான் இந்தளவுக்கு வந்திருக்கேன் ... இவனுவோ அரசியலுக்காக பன்றதை எல்லாம் இப்படி முட்டு கொடுக்க கூடாது...மாணவர்கள் கல்வியில் விளையாட கூடாது புகழ்.......
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
18-மே-202112:52:35 IST Report Abuse
N.K பத்தாம் வகுப்பு வரை, கணிதம், பௌதிகம், அறிவியல், பூகோளம் போன்ற எல்லா பாடங்களையும் படித்து தேர வேண்டும். பிறகு வேண்டிய வகுப்பை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அப்போ கணிதத்தை திணிக்கிறார்கள் என்றோ, கணிதம் வராதவன் அதில் தோல்வியடையவேண்டும் என்று கணிதம் வருபவன் சதி செய்கிறான் என்று யாரும் கூறுவதில்லையே. ஏன்? அது மட்டும் திணிப்பு இல்லையா? ஆங்கிலம் தேவைப்படுபவன் வெளியே பதித்துக்கொள்ளட்டுமே அதை ஏன் திணிக்க வேண்டும். ஏழை மாணவர்கள் ஆங்கிலம் தெரியாமல் தேர்வில் தோல்வி அடைவது சதி இல்லையா?...
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
17-மே-202122:08:40 IST Report Abuse
அறவோன் படிப்பறிவில்லாதவர்கள் கைகளில் அதிகாரம் சென்றதால் இவ்வாறெல்லாம் நடக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X