பொது செய்தி

இந்தியா

டூவீலரில் ஆக்ஸிஜன் விநியோகம்; இளம்பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
லக்னோ: கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவைப்படுபவருக்கு உத்தர பிரதேத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது சொந்த செலவில் ஆக்ஸிஜன் நிரப்பி, தனது டூவீலரிலேயே சென்று விநியோகித்து வருகிறார். அவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலருக்கு ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்து
COVID-19, UP girl, heart,  oxygen , Scooty, ஆக்ஸிஜன், ஆக்சிஜன், இளம்பெண், உத்தர பிரதேசம், பாராட்டு,

லக்னோ: கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவைப்படுபவருக்கு உத்தர பிரதேத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது சொந்த செலவில் ஆக்ஸிஜன் நிரப்பி, தனது டூவீலரிலேயே சென்று விநியோகித்து வருகிறார். அவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலருக்கு ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு உதவ மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும் பலர், சமூக வலைதளங்கள் மூலம் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உதவி கோருகின்றனர். உடனடியாக பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், உ.பி., ஷாஜகான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்ஷி என்ற இளம் பெண் தனது சொந்த செலவில் ஆக்ஸிஜன் நிரப்பி, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு தனது டூவிலரில் சென்று விநியோகம் செய்து வருகிறார்.

ஷஜகான்பூர் மாவட்டம் மதர்கெல் பகுதியை சேர்ந்தவர் ஆர்ஷி . கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவரது தந்தை, கொரோனாவினால் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆக்சிஸின் அளவு குறைவாக உள்ளதாகவும், உடனடியாக ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்யும்படி கூறினர். இதனையடுத்து அவரும் பல நடவடிக்கைகள் எடுத்தும், பலரிடம் உதவி கோரியும் ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்தவர் ஆர்ஷி. வயது 26 சில நாட்களுக்கு முன் ஆர்ஷியின் தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆக்சிஜன் அளவு குறைந்ததால் உடல்நலம் மோசமானது. நண்பர்கள் உதவியால் ஆக்சிஜன் கிடைத்ததால் தந்தை உயிர் பிழைத்தார். இந்த அனுபவம்தான் ஆர்ஷியை மற்றவர்களுக்கு உதவி செய்ய தூண்டியுள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் பலர் உயிரிழப்பதை கேள்விப்பட்ட ஆர்ஷி, 2 சிலிண்டர்களை வாங்கினார். சிலிண்டரில் ஆக்சிஜனை சொந்த செலவில் நிரப்பி, நோயாளிகளின் வீட்டுக்கே ஸ்கூட்டியில் கொண்டு சென்று வழங்குகிறார்.

கடைசியில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆக்ஸிஜன் கிடைத்ததால் அவரது தந்தை உயிர் பிழைத்தார். அப்போது, தனக்கு ஏற்பட்ட பிரச்னை மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது . தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என ஆர்ஷி முடிவு செய்தார். இதனையடுத்து காலி சிலிண்டரை வாங்கிய அவர், தனது சொந்த செலவிலேயே ஆக்ஸிஜன் நிரப்பி அதனை, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு தனது டூவிலரிலேயே சென்று வழங்கி வருகிறார்.


latest tamil news


இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது தந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைக்க பல பிரச்னைகளை சந்தித்தேன். அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தற்போது மற்றவர்களுக்கு உதவி வருகிறேன். எனது சொந்த செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கினேன். வீடுகளில் தனிமைபடுத்தி கொண்டோருக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதனை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நானே எனது சொந்த செலவில், ஆக்ஸிஜன் நிரப்பி அவர்களுக்கு வழங்கி வருகிறேன். எனது தந்தை குணமடைந்த பிறகு 18 முறை, சிலிண்டரில் ஆக்ஸிஜன் நிரப்பி எனது டூவிலரில் சென்று வழங்கி வருகிறேன்.

கொரோனா நோயாளிகளுக்கு யாருக்கேனும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என அறிந்தால், ஆக்ஸிஜன் நிரப்பி, எனது டூவிலரிலேயே சென்று ஆக்ஸிஜனை வழங்குவேன். இவ்வாறு ஆர்ஷி கூறினார்.
ஆர்ஷியின் செயலை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Thanjavur,இந்தியா
18-மே-202102:46:01 IST Report Abuse
Ram பாரத மாதாவை கண்டதில் மகிழ்ச்சீ
Rate this:
Cancel
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
18-மே-202100:22:35 IST Report Abuse
Aanandh அயோக்கியத்தனத்தில் ஊறிய இந்த அரசியல்வாதி ஆட்சியாளர்களுக்கு மிகவும் சவுகரியம். பாதிக்கப் பட்ட வர்கள், அவர்களே மற்றவர்களையும் காப்பாற்றும் செயலை மேற்கொள்வர் என தங்களது பொறுப்பை தட்டி கழிக்கலாம்
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-202119:14:29 IST Report Abuse
முக்கண் மைந்தன் உத்தர பரதேசத்தப்பத்தி நாலு வருசத்துக்கும்மேல ஒரு நல்ல ந்யூசு வந்துருக்கு
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-மே-202102:48:28 IST Report Abuse
மதுரை விருமாண்டிபொண்ணு மூர்க்க பொண்ணு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X