பெண் இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த நபர்: வைரலாகும் வீடியோ

Updated : மே 18, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (76) | |
Advertisement
பல்லடம்: திருப்பூர் அருகே தி.மு.க.,வை சேர்ந்தவர், பெண் இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்தது தொடர்பான வீடியோ, வைரலாகி வருகிறது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பொங்கலுார் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பொங்கலுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க.,வை சேர்ந்த ரவி என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அப்போது, அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர் கோமதியிடம், ரவி
பெண் இன்ஸ்பெக்டர், வாக்குவாதம், வைரல், வீடியோ

பல்லடம்: திருப்பூர் அருகே தி.மு.க.,வை சேர்ந்தவர், பெண் இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்தது தொடர்பான வீடியோ, வைரலாகி வருகிறது.



திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பொங்கலுார் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பொங்கலுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க.,வை சேர்ந்த ரவி என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அப்போது, அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர் கோமதியிடம், ரவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



போதையில் போலீசாரிடம் திமுக பிரமுகர் வாக்குவாதம்

latest tamil news



'நான்தான் அடுத்த ஒன்றிய செயலாளர். நீங்கள் வழக்குப்பதிவு வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது வேட்டி அவிழ்ந்து விழ, உடன் இருந்தவர்கள் அவரை அழைத்து சென்றனர்.ரவி உட்பட காரில் வந்தவர்கள் யாரும் முக கவசம் அணியவில்லை.



இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பல்லடம் டி.எஸ்.பி., ஸ்ரீராமச்சந்திரனிடம் கேட்டதற்கு, ''கடந்த 2ம் தேதி, இச்சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-மே-202110:49:26 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  ஹா ஹா.. விடியல்.. வாங்க உப்பிஸ்.. வந்து அந்த வேஷ்டி அவுத்து நிக்குறவனுக்கு முட்டு கொடுங்க.. திமுகக்காரனுவ அட்டகாசம் தாங்க முடியாது இனி.. தமிழக மக்கள் அனுபவிக்கட்டும்.. இதுவும் வேண்டுமடா இவனுவலுக்கு இன்னமும் வேண்டுமடா
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
18-மே-202110:37:19 IST Report Abuse
Kumar பிஜேபி தமிழகத்தில் ஆட்சி செய்தால் இதைவிட மோசமாக இருக்கும். யாரும் வெளியே தலைகாட்ட முடியாது,இப்படினு முட்டு கொடுக்க வேண்டும். அப்பதான் அவர்கள் நம்மை சுளுக்கு எடுக்க மாட்டார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Vel - Singapore,சிங்கப்பூர்
18-மே-202108:53:04 IST Report Abuse
Vel இவங்களை திருத்தவமுடியாது . இதுதான் தமிழக மக்களின் தலையெழுத்து .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X