பசு கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லை: பிரக்யா தாக்கூர் பேச்சால் சர்ச்சை

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (82) | |
Advertisement
போபால்: தான் தினமும் பசுவின் கோமியம் குடிப்பதாகவும், அதனால் இதுவரை தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் பா.ஜ., எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.சில நாட்களுக்கு முன்பாக மாட்டு சாணத்தை உடலில் பூசுதல், கோமியத்தை குடித்தல் போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு, அவ்வாறு செய்தால் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என சிலர் கூறுவது போன்ற செய்திகள்
BJP_MP, Pragya Thakur, CowUrine, Drink, CoronaVirus, பாஜக, எம்பி, பிரக்யா தாக்கூர், பசு கோமியம், கொரோனா வைரஸ்

போபால்: தான் தினமும் பசுவின் கோமியம் குடிப்பதாகவும், அதனால் இதுவரை தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் பா.ஜ., எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக மாட்டு சாணத்தை உடலில் பூசுதல், கோமியத்தை குடித்தல் போன்ற நடவடிக்கையை மேற்கொண்டு, அவ்வாறு செய்தால் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என சிலர் கூறுவது போன்ற செய்திகள் வெளிவந்தன. ஆனால், இது தவறான நடவடிக்கை என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். மேலும், இதன் மூலம் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், விலங்குகளிடம் இருந்து நோய்கள் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தனர். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் போபால் தொகுதி எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது:


latest tamil news


நானும் பசுவின் கோமியத்தை தினமும் குடிக்கிறேன். அதனால்தான் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளை நட்டு வளர்க்க வேண்டும். அதை நட்டு நீங்கள் வளர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும். அதற்கு தேவையான தண்ணீர் வசதி தண்ணீர் டேங்குகள் மூலமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
18-மே-202112:32:44 IST Report Abuse
Sridhar இதுல சர்ச்சை என்ன வேண்டியிருக்கிறது? அவரவர்களுக்கு அவர்களது நம்பிக்கை. வாக்சின் போட்டால் கொரோனா வராதுங்கறது மேற்கத்திய மருத்துவர்களின் நம்பிக்கை. வாக்சின் போட்டுகொண்டால், மாஸ்க் கூட அணியவேண்டாம் ஒரு எச்சரிக்கை அணுகுமுறையுமின்றி முன்பு போல எல்லோரும் கூடி திரியலாம் என்பது அமெரிக்க ஜனாதிபதியின் நம்பிக்கை. வாக்சின் போட்டாலும் மாஸ்க் அணிந்தே தீரவேண்டும் என்பது அவரது தலைமை மருத்துவ ஆலோசகரின் நம்பிக்கை. ஒருவருக்கும் விஷயம் சரிவர தெரியாதபோது, குருடன் யானையை தொட்டு அது எப்படி இருக்கும் என வர்ணித்ததைப்போல, ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, ஒரு நம்பிக்கை இருக்கும்போது, இன்னொருவரின் நம்பிக்கையை கேலிசெய்வதோ, சர்ச்சைக்கு உள்ளாக்குவதோ, தவறான செயலாகும்.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
18-மே-202111:42:37 IST Report Abuse
Sivagiri அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளை நட்டு வளர்க்க வேண்டும். அதை நட்டு நீங்கள் வளர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும். அதற்கு தேவையான தண்ணீர் வசதி தண்ணீர் டேங்குகள் மூலமாக வழங்கப்படும் - ivvalavu solli irukkare . . .
Rate this:
Cancel
Guna - Chennai,இந்தியா
18-மே-202110:47:26 IST Report Abuse
Guna அரச மரம், ஆலா மரம், புங்கன் மரம், வெப்ப மரம், துளசி செடிகள் போன்றவை பிராண வாயு அதிகம் தரும் மரங்கள். புதுமனை புகுவிழா, கோவில் கும்பாபிஷேகம்,அணைத்து புது கட்டிட விழாக்களில் பசு கோமியம் தெளிப்பார்கள். பசு கோமியம் ஒரு கிருமிநாசினி எனபது இன்னமும் கிராம வாழ்க்கையுடன் தொடர்பு உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. தேவை என்றால் துர்க்கா ஸ்டாலின், சசிகலா, போன்றவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X