கருப்பு பூஞ்சை: உத்தரகண்டில் முதல் பலி

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
ரிஷிகேஷ்: உத்தரகண்டில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர், கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:'மியூகோமைகோசிஸ்' என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை. இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வைக்

ரிஷிகேஷ்: உத்தரகண்டில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர், கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news




ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
'மியூகோமைகோசிஸ்' என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை. இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்த பூஞ்சை பெரும்பாலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே தாக்கியுள்ளது.உத்தரகண்டில் இதுவரை 15 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் கடந்த சில நாள்களுக்கு முன், கொரோனாவால் பதிக்கப்பட்டு எங்களிடம் சிகிச்சைக்கு வந்தார். அவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் கருப்பு பூஞ்சையால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


latest tamil news




கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-மே-202111:54:24 IST Report Abuse
Ramesh R ஆண்டவா எங்களை காப்பாற்று
Rate this:
Cancel
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
17-மே-202123:42:11 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் இதுக்கு 2020 ஏ பரவாயில்ல போலிருக்கே
Rate this:
Cancel
17-மே-202117:40:50 IST Report Abuse
Venkatesan Jeevanantham இதுல தப்பிச்சா இதுல மாட்டிக்குவோமா, இது என்ன கொடுமையா இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X