கொரோனா பலிக்கு இழப்பீடு: அரசு பரிசீலிக்க கோர்ட் உத்தரவு

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனா வைரஸ் பரவலின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கக் கோரும் வழக்கு தொடர்பாக பரிசீலிக்கும்படி, மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. டில்லியில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.டில்லியைச் சேர்ந்த பூரவ்
 கொரோனா பலி, இழப்பீடு, அரசு, பரிசீலிக்க, கோர்ட், உத்தரவு

புதுடில்லி :கொரோனா வைரஸ் பரவலின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கக் கோரும் வழக்கு தொடர்பாக பரிசீலிக்கும்படி, மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. டில்லியில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.டில்லியைச் சேர்ந்த பூரவ் மித்தா என்ற வழக்கறிஞர், டில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.


latest tamil news




மனுவில் அவர் கூறியுள்ளதாவது:ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் டில்லியில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல குடும்பங்கள் வருமானம் ஈட்டித் தரும் நபரை இழந்துள்ளன.

மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்ய வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. பேரிடர் காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க உரிய வழிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், இந்த வழக்கை கோரிக்கை மனுவாக ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
17-மே-202120:55:52 IST Report Abuse
kosu moolai தமிழ்நாட்டில் இதெற்கெல்லாம் அவசியமில்லை யுவர் ஆனர். சொன்னதையும் சொல்லாததையும் செயல் படுத்த துடித்துக்கொண்டிருக்கிற வெளிப்பட தன்மையுடன் ஆட்சி செய்யும் தன்மான திராவிட சிந்தனையாளர் எங்கள் முதல்வர். அவர் எதிர் கட்ச்யில் இருந்த போதே கொரானாவில் இறந்த எல்லோருக்குமே ருபாய் ஒரு கோடி கொடுக்கவேண்டுமென போராடியவர். மேலும் எங்களுக்கு ஒரு தலை சிறந்த மேதாவி நிதி மந்திரியாக கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
Rate this:
Cancel
Shankar - Hawally,குவைத்
17-மே-202120:52:49 IST Report Abuse
Shankar சுழியை அடக்கிட்டு வீட்டுலயே இருந்தால் கொரோனா வராதுன்னு உலகமே கத்தி கத்தி சொல்லிட்டு இருக்கும்போது, நீ திமிர் பிடிச்சி வெளியே சுத்தி கொரோனா வந்து செத்ததுக்கு அரசு எதுக்கு பணம் கொடுக்கணும். நல்ல சொல்றீங்கடா ஜட்ஜமென்ட்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
17-மே-202120:41:40 IST Report Abuse
Narayanan ஸ்டாலின் ஒரு கோடி கொடுக்கவேண்டும் என்று எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது ஆளும் கட்சியை வலியுறுத்தினார் . இப்போ அவரே ஆளும் கட்சியாக முதல்வராக வந்த பிறகு கொடுக்காமல் இருப்பாரா ? சொன்னதை செய்யும் கட்சியாகவும் முதல்வராகவும் தன்னை முன்னிறுத்தும் அவர் விரைவில் கொடுப்பார் ஒரு கோடி . அரசின் கஜானாவை நிரப்பும் பணி நடக்கிறது . அப்படியே போதவில்லை என்றாலும் கவலை இல்லை அவரின் ராஜாவும் கனிமொழியும் கொடுப்பார்கள் .மக்களுக்கு பணி செய்யவந்தவர்கள் செய்வார்கள்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
17-மே-202121:00:35 IST Report Abuse
madhavan rajanஅவர்களெல்லாம் இளிச்சவாயர்கள் என்று நினைத்தீரா? அரசில் அவ்வளவு பணம் தருவதற்கு பதிலாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று அறிவித்துவிடுவார். அவர்கள் அதை வைத்து எவ்வளவு கோடி வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X