பொது செய்தி

இந்தியா

குஜராத்தில் கரையை கடக்க துவங்கியது 'டாக்டே' புயல்

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021
Share
Advertisement
ஆமதாபாத்; 'டாக்டே' புயல், இன்று இரவு குஜராத்தில் கரையை கடக்க துவங்கியது.'டாக்டே' புயலின் கண் பகுதி அடுத்த 3 மணி நேரத்தில் சவுராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.அரபிக்கடலில் உருவான டாக்டே புயல் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.அரபிக் கடலில், லட்சத் தீவு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு
 குஜராத்,கரை,கடக்க துவங்கியது, 'டாக்டே' புயல்

ஆமதாபாத்; 'டாக்டே' புயல், இன்று இரவு குஜராத்தில் கரையை கடக்க துவங்கியது.'டாக்டே' புயலின் கண் பகுதி அடுத்த 3 மணி நேரத்தில் சவுராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவான டாக்டே புயல் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.அரபிக் கடலில், லட்சத் தீவு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. இதற்கு, 'டாக்டே' என, பெயரிடப்பட்டது.


latest tamil news



இந்த புயல், அதி தீவிர புயலாக மாறி, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, கோவா கடற்பகுதியை நெருங்கியது. இதையடுத்து, குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன், கனமழை பொழிந்தது.பலத்த காற்றும் வீசியது.

இந்நிலையில் குஜராத்தின் போர்பந்தர் - மதுவா பகுதியில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து, இன்று இரவு குஜராத்தில் புயல் கரையை கடக்கத்துவங்கியது. முன்னெச்சரிக்கையாக மாநில அரசு, பாதுகாப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளது.



இதுகுறித்து இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: அடுத்த 3 மணி நேரத்தில் புயலின் கண்பகுதி சவுராஷ்டிராவில் கடக்கும். பின்னர் டையூவின் கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரையை நோக்கி செல்லும். புயலின் வெளிபகுதி சவுராஷ்டிராவிலேயே இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X