பொது செய்தி

இந்தியா

சர்ச்சை விஞ்ஞானி திடீர் ராஜினாமா

Updated : மே 19, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி :மத்திய அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த, கொரோனா வைரஸ் ஆய்வு அமைப்பின் தலைவரும், விஞ்ஞானியுமான, ஷாஹித் ஜமீல், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கடந்தாண்டு இறுதியில், உருமாறிய வீரிய கொரோனா வைரஸ் பரவியது.இது குறித்து ஆராய, மத்திய அரசு, 2020, டிச.,25ல், விஞ்ஞானி ஷாஹித் ஜமீல் தலைமையில் கொரோனா
சர்ச்சை, விஞ்ஞானி, , ராஜினாமா


புதுடில்லி :மத்திய அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த, கொரோனா வைரஸ் ஆய்வு அமைப்பின் தலைவரும், விஞ்ஞானியுமான, ஷாஹித் ஜமீல், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கடந்தாண்டு இறுதியில், உருமாறிய வீரிய கொரோனா வைரஸ் பரவியது.இது குறித்து ஆராய, மத்திய அரசு, 2020, டிச.,25ல், விஞ்ஞானி ஷாஹித் ஜமீல் தலைமையில் கொரோனா வைரஸ் மரபணு ஆய்வு அமைப்பை ஏற்படுத்தியது.
இந்த அமைப்பில் தேசிய உயிரி தொழில்நுட்ப ஆய்வகங்களைச் சேர்ந்த, 10 விஞ்ஞானிகளிடம் உருமாறிய கொரோனா வைரஸ் மரபணு குறித்து ஆய்வு செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே இரு மாதங்களுக்கு முன், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை திடீரென வேகமாக பரவியது.

இது குறித்து ஷாஹித் ஜமீல் தலைமையிலான அமைப்பு, உரிய ஆய்வு மேற்கொண்டு எச்சரிக்கத் தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில் ஷாஹித் ஜமீல், கொரோனா வைரஸ் மரபணு ஆய்வு அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஷாஹித் ஜமீல் கடந்த வாரம், அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், ஆய்வு ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்காமல், தனக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு கொள்கைகளை வகுப்பதாக, அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே ஷாஹித் ஜமீல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனாலும், ராஜினாமாவுக்கான காரணத்தை, அவர் குறிப்பிடவில்லை.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
18-மே-202123:54:46 IST Report Abuse
PRAKASH.P முட்டாள்களிடம் வேலை பார்க்க விருப்பமில்லை அதான்
Rate this:
Cancel
Kannan - Umayalpuram,இந்தியா
18-மே-202121:54:59 IST Report Abuse
Kannan பின்னர் முடிவு செய்யலாம்
Rate this:
Cancel
Kannan - Umayalpuram,இந்தியா
18-மே-202121:49:41 IST Report Abuse
Kannan அவருடைய அறிக்கை முழுமையாகப் படிக்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X